ஒருநாள் அணியின் கேப்டன் பதவியையும் இழக்கிறாரா விராட் கோலி?
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்துவரும் விராட் கோலி கடந்த சில ஆண்டுகளாகவே கடும் விமர்சனத்தை எதிர்கொண்டு வருகிறார். காரணம் இவரது தலைமையில் ஐசிசி மற்றும் உலகக்கோப்பை சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஒருமுறை கூட இந்திய கிரிக்கெட் அணி வெற்றிப்பெறவில்லை. இதைத்தவிர வீரர்கள் தேர்வு முறையிலும் அவர் சொதப்புகிறார். அதோடு நல்ல ஃபார்மிலும் இல்லை என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் ஐபிஎல் 14 ஆவது சீசன் தொடரின் இரண்டாம் கட்ட போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றபோது தான் டி20 உலகக்கோப்பை போட்டித்தொடருக்குப் பின் இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
தற்போது டி20 உலகக்கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெறும் சூப்பர்-12 க்கான இந்த போட்டிகளில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணியுடன் மோதி படு சொதப்பலாக தோற்றுள்ளது. இதனால் அரை இறுதிப்போட்டிக்குள் நுழைவதற்கான வாய்ப்புகளை எல்லாம் இழந்து மற்ற அணிகளின் முடிவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இந்தத் தோல்விக்கு கேப்டன் விராட் கோலியே காரணம் என்றும் அவர் வீரர்களின் வரிசை முறையில் மாற்றங்களை செய்துவிட்டார் என்று குற்றம் சுமத்தப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து இந்தியா அரைஇறுதிக்குள் நுழையா விட்டால் விராட் கோலி இந்தியக் கிரிக்கெட் அணிக்கான ஒருநாள் அணியின் கேப்டன் பதவியையும் இழக்க நேரிடும் என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் பிசிசிஐ தலைமை மகிழ்ச்சியில் இல்லை என்றும் கேப்டன் விராட் கோலி மீது அதிருப்தி கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து இந்தியக் கிரிக்கெட் அணியின் 3 வடிவங்களுக்கும் 3 கேப்டன்கள் நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout