மோடி மோசடியால் விராத் கோஹ்லி பதவிக்கு ஆபத்தா?
- IndiaGlitz, [Saturday,February 24 2018]
பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11500 கோடி கடன் பெற்று வெளிநாட்டுக்கு தப்பியோடிய நிலையில் அந்த வங்கியின் நிலை ஆட்டம் கண்டுள்ளது. பங்கு மார்க்கெட்டில் பிஎன்பி வங்கியின் பங்குகள் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் இந்த வங்கியின் பல ஊழியர்கள் டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் விளம்பரத்தூதராக இருந்து வரும் விராத் கோலி தனது பதவியை விட்டு விலகவிருப்பதாகவும், அவர் பிஎன்பி வங்கியின் விளம்பரத்தூதர் பதவிக்கான ஒப்பந்தத்தை முடித்துக்கொண்டதாகவும் கூறப்பட்டது.
ஆனால் இந்த தகவலை பிஎன்பி வங்கி நிர்வாகம் மறுத்துள்ளது. இதுகுறித்து கூறிய அந்த வங்கி நிர்வாகிகள், பிஎன்பி வங்கியின் விளம்பரத்தூதராக விராத் கோலி தொடர்ந்து செயல்படுவார் என தெரிவித்துள்ளனர். ஏற்கனவே நீரவ் மோடியின் வைரநகை கடைகளுக்கு விளம்பர தூதராக இருந்த நடிகை பிரியங்கா சோப்ரா, அந்த பதவியில் இருந்து விலக சட்டபூர்வமான நடவடிக்கை எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது