மனைவியின் பிகினி புகைப்படத்திற்கு விராத் கோஹ்லியின் கமெண்ட்!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோஹ்லியின் மனைவியும் பிரபல பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மா, கடந்த ஆண்டு வெளிவந்த 'ஜீரோ' படத்திற்கு பின் வேறு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகவில்லை. இதனால் அவர் கர்ப்பமாக இருப்பதாக வதந்தி எழுந்தது. இந்த வதந்திக்கு அனுஷ்கா ஷர்மா மறுப்பு தெரிவித்து, கர்ப்பமடைந்தால் கண்டிப்பாக தனது ரசிகர்களுக்கு தெரியப்படுத்துவேன் என்று கூறியிருந்தார்

இந்த நிலையில் அனுஷ்கா ஷர்மா சமூக வலைத்தள பக்கத்தில் தனது பிகினி புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த பதிவிற்கு ஒருசில மணி நேரத்தில் ஒன்றரை மில்லியனுக்கும் அதிகமான லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் மனைவி அனுஷ்கா ஷர்மாவின் பிகினி புகைப்படத்திற்கு விராத் கோஹ்லி கமெண்ட் பகுதியில் இதய வடிவில் ஒரு எமோஜியை பதிவு செய்துள்ளார். விராத்கோஹ்லியின் இந்த எமோஜிக்க்கும் ஆயிரக்கணக்கில் லைக்ஸ்களும், ரிப்ளைகளும் ரசிகர்களால் பதிவு செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது