முதல் இந்தியர் இவர்தான்… மிரள வைக்கும் விராட் கோலியின் சோஷியல் மீடியா சாதனை!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாகவும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் முன்னாள் கேப்டனாகவும் இருந்து தற்போது முக்கிய வீரராக விளையாடி வரும் விராட் கோலி கிரிக்கெட்டைத் தவிர சமூகவலை தளங்களிலும் பிரபலமாக அறியபடுகிறார். அவருடைய ஒரு சாதனைதான் தற்போது அனைவராலும் பாராட்டப்படுகிறது.
இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்களுள் ஒருவரான விராட் கோலி கிரிக்கெட்டைத் தவிர விளம்பரப் படங்கள் மற்றும் சமூகவலைத் தளங்களிலும் பிரபலமாக இருந்துவருகிறார். அந்த வகையில் தற்போது அவருடைய இன்ஸ்டாகிராம் கணக்கை 250 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். இதனால் இன்ஸ்டாகிராமில் அதிகளவில் ஃபாலோயர்களைக் கொண்ட முதல் இந்தியர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார்.
மேலும் உலக அளவில் அதிகமான ரசிகர்கள் பின்தொடரும் நான்காவது விளையாட்டு வீரர் என்ற பெருமையும் விராட் கோலிக்கு கிடைத்திருக்கிறது. இதையடுத்து கோலியின் ரசிகர்கள் அவருக்குப் பராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
ஐபிஎல் 16 ஆவது சீசனில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடிய விராட் கோலி இறுதி ஆட்டத்தில் சதம் அடித்து மீண்டும் தனது பேட்டிங் திறமையை வெளிப்படுத்தி இருந்தார். இதனால் ரசிகர்கள் பலரும் அவரைக் கொண்டாடினர். ஆனால் ஆர்சிபி அணி ஃப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறவில்லை. இதையடுத்து இலக்கை அடையமுடியாததற்கு விராட் கோலி தனது சோஷியல் மீடியாவில் வருத்தம் தெரிவித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
16 ஆவது சீசனில் விளையாடிய கோலி 14 போட்டிகளில் விளையாடி 639 ரன்களையும் 53.25 சராசரியையும் பெற்றுள்ளார். அதேபோல இந்த சீசனில் 2 சதத்தையும் 6 அரைச் சதங்களையும் அவர் அடித்திருந்தார். இந்நிலையில் அதிக அளவில் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களைக் கொண்ட முதல் இந்தியர் என்ற பெருமையையையும் உலகில் அதிக ரசிகர்கள் பின்தொடரும் 4 ஆவது விளையாட்டு வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
இன்ஸ்டாகிராம் பிரபலங்கள்
போர்சுக்கல் கால்பந்து அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ இன்ஸ்டாகிராமில் 585 மில்லியன் ஃபாலோயர்களைப் பெற்று இதில் முதல் இடத்தைப் பெற்றுள்ளார்.
அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் மற்றும் பிஎஸ்ஜி சூப்பர் ஸ்டாராக இருந்துவரும் லியோனல் மெஸ்ஸி இன்ஸ்டாகிராமில் 464 மில்லியன் ஃபாலோயர்களைப் பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
மல்யுத்த வீரராக இருந்து தற்போது ஹாலிவுட் நடிகராக மாறிய டுவைன் தி ராக் ஜான்சன் இன்ஸ்டாகிராமில் 380 மில்லியன் ஃபாலோயர்களைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் 250 மில்லியன் ஃபாலோயர்களைப் பெற்று நான்காவது இடத்தைப் பிடித்திருக்கிறார்.
பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர் இன்ஸ்டாகிராமில் 200 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களைப் பெற்று ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
கூடைபந்து விளையாட்டு வீரர் லெப்ரான் ஜேம்ஸ் இன்ஸ்டாகிராமில் 153 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களைப் பெற்று ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கால்பந்து வீரர் கைலியன் எம்பாப்பே இன்ஸ்டாகிராமில் 100 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களைப் பெற்று ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com