பவுண்டரி லைனை பேட்டால் அடித்த விராட் கோலி… இணையத்தில் வெடிக்கும் சர்ச்சை!
Send us your feedback to audioarticles@vaarta.com
2021 ஐபிஎல் போட்டியை ஒட்டி ஏப்ரல் 14 ஆம் தேதி பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் ஹைத்ராபாத் அணியும் மோதிக் கொண்டன. இந்தப் போட்டியின்போது பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி செய்த ஒரு காரியம் தற்போது சமூக வலைத்தளத்தில் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து வரும் விராட்கோலி கிரிக்கெட் விளையாட்டில் பல்வேறு சாதனைகளைப் புரிந்துள்ளார். அதோடு டி20 போட்டி, ஒருநாள் போட்டி, டெஸ்ட் போட்டி என அனைத்து நிலைகளிலும் சிறந்த கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார். மேலும் பேட்டிங், ஃபீல்டிங் எனத் தனிப்பட்ட திறமைகளிலும் தொடர்ந்து தன்னை நிலைநாட்டி வரும் அவர் கிரிக்கெட் களத்தில் நடந்து கொள்ளும் விதிமீறல்களால் பலமுறை விமர்சனத்தைச் சந்தித்து இருக்கிறார்.
அதாவது அம்பயருடன் விவாதத்தில் ஈடுபடுவது, தான் அவுட் ஆகிவிட்டால் அதை வேறு விதங்களில் வெளிப்படுத்துவது எனப் பலமுறை விராட்கோலி தனது செயல்பாடுகளால் விமர்சனத்தைச் சந்தித்து இருக்கிறார். அப்படியொரு சம்பவம்தான் கடந்த 14 ஆம் தேதி நடைபெற்று இருக்கிறது. ஹைத்ராபாத் அணிக்கு எதிராக விளையாடிய முதல் போட்டியில் கேப்டன் விராட் கோலி 33 ரன்களில் அவுட்டானார்.
இதனால் விரக்தியடைந்த அவர் கிரிக்கெட் களத்தைவிட்டு வெளியேறும்போது பவுண்டரி லைனில் இருந்த விளம்பரப் பலகையை பேட்டால் தட்டிவிட்டுள்ளார். அதேபோல அருகில் இருந்த இருக்கைகளையும் பேட்டால் தாக்கியுள்ளார். விராட் கோலியின் இந்த ஆக்ரோஷமான செயல்தான் தற்போது சமூக வலைத்தளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த செயல்குறித்து அம்பயர் வெங்கலில் நாராயணன் புகார் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்தப் புகாரை அடுத்து தனது விதிமீறலையும் விராட் ஒப்புக்கொண்டார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
2021 ஐபிஎல் தொடக்கத்தின்போதே விராட்கோலி விதிமீறலில் ஈடுபட்டார் என்று நடுவர் ஒருவர் கண்டனம் தெரிவித்து இருந்தார். தற்போது விளம்பரப் பலகையைத் தட்டிவிட்டு மேலும் விதிமீறலில் ஈடுபட்டுள்ளார். ஆனால் இந்த முறை கோலி எந்த தண்டனையும் பெறாமல் தப்பிவிட்டார். ஒருவேளை மீண்டும் இதுபோன்ற விதிமீறலில் ஈடுபட்டால் அவருக்கு உறுதியாக தண்டனை கிடைக்கும் என்றும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
When you can't hit bowlers ????#RCBvsSRH pic.twitter.com/NSaFMS1upg
— MSDian (@CaptainSpy7) April 14, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com