விராத் 6000, படிக்கல் சதம்: பெங்களூரு-ராஜஸ்தான் போட்டியில் வெறென்ன சாதனைகள்?
- IndiaGlitz, [Friday,April 23 2021] Sports News
நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் அணி மோதிய நிலையில் பெங்களூர் அணி ராஜஸ்தான் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 178 என்ற இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூர் அணி விக்கெட் இழப்பின்றி 181 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இந்த போட்டியில் பல சாதனைகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. முதலாவதாக விராட் கோலி மற்றும் படிக்கல் ஆகிய இருவரும் இணைந்து 181 ரன்கள் பார்ட்னர்ஷிப்பில் எடுத்து உள்ளனர். பெங்களூரு அணியின் மிக அதிக ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் ரன்கள் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது
விக்கெட் இழப்பின்றி பெங்களூர் அணி வெற்றி பெற்ற மூன்றாவது பெரிய இலக்கு 178 என்பது குறிப்பிடத்தக்கது
இந்த போட்டியில் விராத் கோலி 6 ஆயிரம் ரன்களை கடந்து உள்ளார் என்பதும் ஐபிஎல் வரலாற்றில் 6 ஆயிரம் ரன்களை கடந்த ஒரே வீரர் விராத் கோலி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது
10 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெறுவது இது நான்காவது முறை என்பது ஒரு சாதனையாகும்
மிக மிக இளவயதில் ஐபிஎல் கிரிக்கெட்டில் சதமடித்த வீரர்களில் ஒருவர் படிக்கல் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் மனிஷ் பாண்டே மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் இளவயதில் சதம் அடித்த நிலையில் 3-வது வீரராக படிக்கல் இந்த பட்டியலில் இணைகிறார்
பெங்களூர் அணி நேற்று தனது 200வது போட்டியில் விளையாடி உள்ளது. இதற்கு முன் மும்பை அணி 200 போட்டிகளை முடித்துள்ள நிலையில் தற்போது அடுத்ததாக பெங்களூர் அணி 200 போட்டிகளில் விளையாடி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
நேற்றைய போட்டியில் விராத் கோலி அரைசதம் அடித்த நிலையில் அவரது 45வது ஐபிஎல் அரைசதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து அவர் ஷிகர் தவான் சாதனையை சமன் செய்துள்ளார்.
விராட் கோலி கேப்டன்ஷிப்பில் பெங்களூரு அணி விளையாடும் 129வது போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் போட்டிகளில் அதிக போட்டிகளில் கேப்டனாக இருந்த கௌதம் காம்பீர் உடன் விராட் கோலி இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.