கை கொடுத்தது தப்பா? மைதானத்திலேயே மோதிக்கொண்ட விராத் கோஹ்லி மற்றும் கௌதம் காம்பீர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்றைய ஐபிஎல் போட்டி முடிவடைந்ததும் மைதானத்திலேயே பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி மற்றும் லக்னோ அணியின் ஆலோசகர் கௌதம் கம்பீர் ஆகிய இருவரும் மோதிக்கொண்ட வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
நேற்று நடைபெற்ற பெங்களூரு மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர் நிலையில் 9 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த நிலையில் 127 என்ற இலக்கை நோக்கி லக்னோ அணி விளையாடிய நிலையில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்கள் மட்டுமே எடுத்ததால் பெங்களூர் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இந்த போட்டி முடிவடைந்ததும் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் லக்னோ அணியின் ஆலோசகர் கௌதம் கம்பீர் ஆகிய இருவரும் மைதானத்திலேயே காரசாரமாக வாக்குவாதம் செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போட்டி முடிவடைந்ததும் லக்னோ அணியின் கைல் மேயர் உடன் விராட் கோஹ்லி கைகுலுக்கி பேசிக் கொண்டிருந்தபோது திடீரென அங்கு வந்த கௌதம் கம்பீர் மேயர் கையை பிடித்து அழைத்துச் சென்றது தான் மோதலுக்கு காரணமாக கூறப்படுகிறது.
இந்த மோதலை அங்கு இருந்த சக வீரர்கள் தடுத்து சமாதானம் செய்த போதிலும் கௌதம் கம்பீர் ஆவேசமாக விராத் கோஹ்லியை நோக்கி வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகள் வைரல் ஆகி வரும் வீடியோவில் உள்ளன.
விராத் கோலி மற்றும் கௌதம் கம்பீர் ஆகிய இருவரும் மோதிக்கொள்வது இது முதல் முறையல்ல. ஏற்கனவே கடந்த 2013 ஆம் ஆண்டு கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்த கௌதம் கம்பீர் பெங்களூரு அணியின் கேப்டனாக இருந்த விராட் கோஹ்லியிடம் சின்னசாமி ஸ்டேடியத்தில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என்பதும், அப்போது அது தலைப்பு செய்தியாக ஊடகங்களில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஐபிஎல் விதிமுறைகளை மீறியதாக விராட் கோலி மற்றும் கௌதம் கம்பீர் ஆகிய இருவருக்கும் 100% சம்பளத்தில் அபராதம் விதித்து ஐபிஎல் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமின்றி விராட் கோலி இடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட லக்னோ வீரர் நவீன் உல் ஹக் என்பவருக்கும் ஊதியத்தில் 50% அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்த வீடியோ இணையதளங்களை வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments