மாயாஜாலம் காட்டிய ஷமி-பும்ரா ஜோடி… உற்சாகத்தில் பொங்கிய கோலி!
Send us your feedback to audioarticles@vaarta.com
லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றுள்ளது. இந்நிலையில் ஷமி-பும்ரா ஜோடியை நினைத்து ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் உருக்கம் தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
காரணம் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இன்னிங்ஸில் இந்தியா அணி 364 ரன்களை எடுத்திருந்த நிலையில் இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸில் 391 ரன்களை எடுத்து டஃப் கொடுத்தது. மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு வெறும் 181 ரன்களை குவித்த நிலையில் ஒட்டுமொத்த டாப் ஆர்டர் வீரர்களும் ஆட்டமிழந்தனர்.
இதைத்தொடர்ந்து களம் இறங்கிய ரிஷப் பண்ட், இஷாந்த் சர்மாவும் கையை விரித்த நிலையில் இந்தியாவின் தோல்வி உறுதியானது. இந்தத் தருணத்தில் ஷமி- பும்ரா களம் இறங்கியபோதுதான் மாயாஜாலம் நடந்தது. அதாவது இந்தியா 8 விக்கெட்டை இழந்த நிலையில் பேட்டிங் செய்த பும்ராவிடம் இங்கிலாந்து வீரர்கள் வம்பிழுக்க ஆரம்பித்துவிட்டனர். காரணம் முதல் இன்னிங்ஸ் போட்டியின்போது இங்கிலாந்து கேப்டன் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓவரில் பும்ரா பவுன்சர் பந்துகளைப் போட்டு தாக்கியிருந்தார்.
ஒரு ஓவர் முழுக்க பவுன்சர் பந்துகளைப் போட்டதால் கடுப்பான இங்கிலாந்து வீரர்கள் பும்ராவை பதம் பார்த்துவிட நினைத்தனர். ஆனால் அவர்கள் நினைத்ததற்கு மாறாக பும்ரா-ஷமி ஜோடி இங்கிலாந்து வீரர்களை கதிகலங்க வைத்த காட்சி தற்போது ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களுக்கும் கொண்டாட்டமாக இருந்து வருகிறது.
இங்கிலாந்து வீரர்களின் பந்துகளை நன்கு புரிந்துகொண்ட பும்ரா-ஷமி ஜோடி முதலில் பதுங்கினாலும் பின்பு பவுண்டரி, சிக்ஸர் என தட்டித்தூக்கியக் காட்சி தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த ஜோடியின் ஆட்டத்தைப் பார்த்து கேப்டன் கோலி உற்சாகத்தில் பொங்கியதும் ஓய்வறையில் இருந்த அனைத்து வீரர்களும் படி இறங்கிவந்து வரவேற்ற காட்சியும் தற்போது இந்திய ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
இந்நிலையில் கேப்டன் கோலி ஒருவேளை டிக்ளேர் செய்யாமல் இருந்தால் இநத் ஜோடி 220 முடிய வேண்டிய ரன் ரேட்டிங்கை 300 வரை கொண்டு சென்றிருப்பார்கள் என்றும் ரசிகர்கள் புகழத் துவங்கிவிட்டனர்.
A partnership to remember for ages for @Jaspritbumrah93 & @MdShami11 on the field and a rousing welcome back to the dressing room from #TeamIndia.
— BCCI (@BCCI) August 16, 2021
What a moment this at Lord's ??????#ENGvIND pic.twitter.com/biRa32CDTt
Heat is on, Bumrah ??????. #ENGvIND pic.twitter.com/ImuEAHiHAG
— Jon | Michael | Tyrion ???? (@tyrion_jon) August 16, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments