விராத் கோஹ்லி: உலகின் மிகச்சிறந்த வீரர் விராத் கோஹ்லியின் வெற்றி ரகசியம்

  • IndiaGlitz, [Saturday,March 24 2018]

விராத் கோஹ்லி என்ற பெயரை கேட்டாலே இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு உற்சாகம் வந்துவிடும். அந்த அளவுக்கு அவருடைய ஆட்டத்தில் ஒரு வெறித்தனம் இருக்கும். இதனால்தான் அவர் இன்று உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக கருதப்படுகிறார். அவருடைய இந்த நிலைக்கு அவருடைய விடா முயற்சி, பயிற்சி மட்டும் காரணமல்ல, அவர் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்ப்பதும் ஒரு முக்கிய காரணம்

ஒரு தேர்வுக்கு தயாராகும் மாணவன் போல் விராத் கோஹ்லி ஓவ்வொரு போட்டி தொடருக்கு செல்லும் முன்பும் அவர் தன்னை தயார்ப்படுத்தி கொள்கிறார். அந்த வகையில் வரும் ஏப்ரல் முதல் தொடங்கவிருக்கும் ஐபிஎல் போட்டிக்காக தற்போது தயாராகி வருகிறார்.

விராத் கோஹ்லி தன்னுடைய உடலிலும் மனதிலும் சக்தியை வரவழைத்து கொள்ள அவர் புதுவிதமான டெக்னிக்கை கடைபிடிக்கின்றார். அவர் ஒரு அதிநவீன மாஸ்க் அணிந்து அதன் மூலம் தன் உடலில் சக்தியை அதிகரித்து கொள்கிறார். இந்த மாஸ்க் நுரையீரல்களுக்கு தேவையான அளவிற்கு சரியான ஆக்சிஜனை கொண்டு செல்கிறது. இதனால் உடலில் மட்டுமின்றி மனதிலும் சோர்வே இல்லை என்ற நிலை ஏற்படுகிறது. நுரையீரல்களில் சரியான அளவில் ஆக்சிஜன் சென்றால் அதனால் கிடைக்கும் சக்தி மிக அதிகம்

அதனால்தான் விராத் கோஹ்லியால் விக்கெட்டுக்களுக்கு இடையே மிக வேகமாக ஓடி ரன்களை குவிக்க முடிகிறது. பவர்புல்லான ஷாட்டுக்கள் அடித்து பந்துகளை பவுண்டரிக்கும் சிக்சருக்கும் விரட்ட முடிகிறது. உலகின் நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்து கொள்ள முடிகிறது.

சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவர் தனக்கு மிகவும் பிடித்த நான் மற்றும் பட்டர் சிக்கன் மசாலாவை கடந்த நான்கு வருடங்களாக தவிர்த்துள்ளார். உடல்நிலையை பாதிக்கும் எந்த ஒரு உணவையும் அவர் தவிர்த்து வருவதால் தான் அவர் தன்னை ஃபிட்டாக வைத்து கொண்டு வெற்றி மேல் வெற்றி குவிக்க முடிகிறது.