இரண்டு-மூன்று சைகைகளில் பேசிக்கொண்ட விராத்-மயாங்க்: இன்றைய சுவாரஸ்யங்கள்

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நேற்று இந்தூரில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி, முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணி பந்து வீச்சாளர்களை தாக்கு பிடிக்க முடியாமல் வங்கதேச அணி150 ரன்களில் சுருண்டது

இதனையடுத்து இந்திய அணி பேட்டிங் செய்த நிலையில், தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 6 ரன்களிலும், கேப்டன் விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். இருப்பினும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான மயங்க் அகர்வால் நிலைத்து நின்று ஆடி, வங்க தேச பந்து வீச்சாளர்களின் பந்துகளை அடித்து நொறுக்கினார். இதனை அடுத்து அவர் தனது 3 வது சதத்தை பதிவு செய்தார்.

அதன் பின்னர் அவருடைய ஆட்டம் வேகமெடுத்து, மிகக் குறுகிய கால இடைவெளியில் 150 ரன்களை கடந்தபோது டிரஸ்ஸிங் ரூமில் இருந்து கேப்டன் கோலி இரண்டு விரல்களை கைகாட்டி இரட்டை சதம் அடிக்க வேண்டும் என்று அகர்வாலுக்கு சைகையில் கூறினார். அதற்கு சைகையிலேயே சரி என்று பதிலளித்த மயங்க் அகர்வால் சொன்ன சொல்லைக் காப்பாற்றும் வகையில், அடுத்த சில நிமிடங்களில் இரட்டை சதத்தை அடித்தார். இதனை அடுத்து மீண்டும் சைகையில் ’நீங்கள் சொன்னதை நிறைவேற்றி விட்டேன்’ என்று மகா மயங்க் அகர்வால் கூறினார். அதற்கு மீண்டும் விராட் கோலி மூன்று விரல்களை கைகாட்டி முச்சதம் அடி’ என்று ரிப்ளை செய்தார். இருப்பினும் அகர்வால் 243 ரன்களில் ஆட்டமிழந்தார். விராத், மயாங்க் அகர்வால் ஆகிய இருவரும் இரு இரண்டு மூன்று முறை சைகையில் பேசிக் கொண்டதை மைதானத்தில் இருந்த ரசிகர்கள் பார்த்து ரசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது