விஷப் பாம்புக்கே தாகம் தீர்த்த அசால்ட் மனிதர்… வைரல் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
4 அடி பாம்பை பார்த்துவிட்டால் 4 கிலோ மீட்டர் தூரம் ஓடும் மனிதர்களுக்கு மத்தியில் ஒருவர் தன்னுடைய பாட்டிலில் வைத்து இருந்த தண்ணீரைக் கொண்டு விஷப் பாம்புக்கு தண்ணீர் தாகம் தீர்த்து இருக்கிறார். அந்தப் பாம்பும் பாட்டிலுக்குள் தாடையை நீட்டி தண்ணீரை குடிக்கிறது. ஏன் முழுங்குவது கூட அந்த வீடியோவில் கண்கூடாகத் தெரிகிறது. இந்த வீடியோதான் இன்று சமூக வலைத்தளத்தில் படு வைரலாகி இருக்கிறது.
வன அதிகாரி சுசாந்தா நந்தா என்பவர் பதிவிட்டு உள்ள இந்த வீடியோவில் அதிக விஷமுடைய கிங் கோப்ரா பாம்புக்கு ஒருவர் தண்ணீர் கொடுக்கிறார். அதை பாம்பு குடிக்கிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் உண்மையில் பாம்பு தண்ணீர் குடிக்குமா? விஷமுடைய பாம்புக்கு அந்த மனிதர் எப்படி தண்ணீர் கொடுக்கிறார்? இதை வீடியோவில் பார்ப்பதற்கே உடம்பு சிலிர்க்கிறது எனப் பலவாறு கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர். மேலும் பதிவிடப்பட்ட ஒரே நாளில் இந்த வீடியோவை 22,200 பேர் பார்த்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாம்பு உண்மையில் தண்ணீர் குடிக்கும். ஆனால் தன்னுடைய நாக்கை பயன்படுத்தி பாம்பு தண்ணீர் குடிக்காது. இதற்கு தனது தாடையைத்தான் பயன்படுத்தும். அந்த வகையில் வீடியோவில் உள்ள பாம்பும் தண்ணீரை அழகாக குடித்து முழுங்குகிறது. இதபோல கடந்த 2020 ஆம் ஆண்டிலும் சுசாந்தா நந்தா ஒரு வீடியோவை பதிவிட்டு உள்ளார். அதில் பச்சை பாம்பு ஒன்று உள்ளங்கையில் வைக்கப்பட்டு உள்ள தண்ணீரை குடிக்கிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் கடும் வியப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
Snake sipping in some water.
— Susanta Nanda IFS (@susantananda3) June 18, 2020
Tongue doesn’t help a snake get water.
It is said that they depress their jaws creating negative pressure to draw the water & then seal up the mouth to create a positive pressure & push the water into their body. pic.twitter.com/5KZPxWsHDf
Love & water...
— Susanta Nanda IFS (@susantananda3) February 16, 2021
Two best ingredients of life pic.twitter.com/dy3qB40m6N
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments