ஒரு Subscribe பட்டனை அழுத்தியதற்கு 40 கார்கள் பரிசு… மலைப்பை ஏற்படுத்தும் சம்பவம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
யூடியூப் சேனலை நடத்தி வருபவர்களுக்கு பெரும்பாலும் அவர்களின் Subscribe எண்ணிக்கையைப் பொருத்தே வருமானம் கிடைக்கும். இதனால் ஒவ்வொரு விடியோவை பதவிடும்போதும் அதன் நிர்வாகிகள் Subscribe பட்டனை அழுத்துங்கள் என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கின்றனர். அப்படி ஒரு யூடியூப் சேனலை Subscribe செய்தவருக்கு தற்போது லாட்டரி அடித்து இருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு லூக் என்பவரது வீட்டிற்கு முன் வண்ண, வண்ண நிறங்களில் 40 கார்கள் வந்து இறங்குவதைப் பார்த்து அவர் மலைத்தே போயிருக்கிறார்.
பின்புதான் தெரிந்து இருக்கிறது. ஒரு யூடியூப் சேனலை Subscribe செய்வதற்கு கிடைத்த பரிசு என்று. பரிசு மழையில் நனைந்த லூக் தற்போது தாத்தா, பாட்டி, தன்னுடைய கார் டிரைவர் முதற்கொண்டு பலருக்கும் அந்தக் கார்களை தன்னுடைய பரிசாக கொடுத்து இருக்கிறார். இறுதியில் பரிசு கொடுத்தவருக்கும் ஒரு காரை பரிசளித்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார்.
ஜிம்மி டொனால்ட்சன் என்பவர் மிஸ்டர் பீஸ்ட் என்ற யூடியூப் சேனலைத் தொடர்ந்து நடத்தி வருகிறார். இவரது யூடியூப் சேனல் இளைஞர்கள் மத்தியில் உலகப் பிரபலம். மேலும் வினோதம், விசித்திரத்திற்கும் இந்த சேனலில் பஞ்சமே இருக்காது. ஜிம்மி தன்னுடைய சேனலில் பதிவிடுவதற்காக ஒரு தீவை விலைக்கு வாங்குவது, ஷோரூமில் இருக்கும் அனைத்து கார்களையும் விலைக்கு வாங்குவது, இலவசமாக வங்கியைத் தொடங்குவது, உணவு பரிமாறியவருக்கு ஆயிரக்கணக்கான டாலர்களை டிப்ஸாகக் கொடுப்பது என தன்னுடைய ரசிகர்களை மலைக்க வைக்கும் செயல்களையே எப்போதும் செய்வார்.
அப்படி ஒரு செயலைத் தற்போதும் செய்திருக்கிறார். தன்னுடைய மிஸ்டர் பீஸ்ட் யூடியூப் சேனலுக்கு 40 மில்லியன் Subscribe கள் கிடைத்து இருக்கிறது. எனவே 40 கார்களை பரிசளிக்க வேண்டும் என முடிவெடுத்த ஜிம்மி, தனக்கு 40 மில்லியன் இடத்தில் Subscribe செய்த லூக் என்பவரது வீட்டிற்குமுன் 40 கார்களைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். அதுவும் ஒரே நாள் இரவில் என்பதுதான் ஆச்சர்யமே.
மேலும் இந்த சேனலுக்கு 3 மில்லியன் Subscribe வந்தபோது ஜிம்மி கொடுத்த பரிசு என்ன தெரியுமா, 30 மில்லியன் சில்லறைகள். 4 மில்லியனைத் தொடும்போது அதே எண்ணிக்கையில் குக்கீஸ்களை பகிர்ந்து கொடுத்து இருக்கிறார். 5 மில்லியனைத் தொட்டபோது அதே எண்ணிக்கையில் பாப்கானை கொடுத்து இருக்கிறார். 7 மில்லியனைத் தொட்டபோது அந்த இடத்தில் Subscribe செய்தவருக்கு 7 மில்லியன் டாலர்களைக பரிசாகக் கொடுத்ததோடு 7 மில்லியன் டாய்லட் பேப்பர் சுருள்களையும் பரிசாக வழங்கியிருக்கிறார். இப்படி ஜிம்மின் சுவாரசியத்திற்கு அளவே இல்லை என்கின்றனர் அவருடைய ரசிகர்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments