இவரெல்லாம் கிரிக்கெட்டுல ஜொலிப்பாருனு நா கொஞ்சம்கூட நினைக்கல... இந்திய ஜாம்பவான் பற்றி வைரலாகும் புதுத்தகவல்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாக்கார் யூனிஸ் இந்திய கிரிக்கெட் ஜாம்வனாகக் கருதப்படும் சச்சின் டெண்டுல்கர் பற்றி ஒரு சுவாரசியமான தகவலை பகிர்ந்து கொண்டு இருக்கிறார். இப்போதைய நிலைமையை பொறுத்த அளவில் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டில் யாருமே தொடமுடியாத உச்சத்தை எட்டியிருக்கிறார். அருவடைய ஆரம்பக் கட்ட ஆட்டத்தைப் பார்க்கும் போது பின்னால் இவ்வளவு பெரிய புகழை சம்பாதிப்பார் என நான் கொஞ்சம் கூட நம்பவில்லை என்று தன்னுடைய அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டு இருக்கிறார் யூனிஸ்.
இந்தியக் கிரிக்கெட் அணியின் கிரேட் வீரராகக் கருதப்படும் சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய 16 ஆவது வயதில் 1989 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கலந்து கொண்டார். அவர் கலந்து கொண்ட முதல் இன்னிஸ்ங்கில் 15 ரன்களை எடுத்த நிலையில் வாக்கார் யூனிஸ் பந்தில் கிளீன் போல்ட் ஆனார். பாகிஸ்தானுக்கு எதிராக கலந்து கொண்ட அடுத்த போட்டியிலும் அவர் டக்-அவுட் ஆனார். இந்த இரு அனுபவங்களை பார்க்கும்போது சச்சின் தன்னை பெரிதாக ஈர்க்கவில்லை என்று தன்னுடைய பழைய அனுபவங்களை தற்போது யூனிஸ் பகிர்ந்து கொண்டு இருக்கிறார்.
24 வருடங்களாக இந்திய கிரிக்கெட் அணி சார்பாக விளையாடியவர் சச்சின். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்களை குவித்த இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை செய்திருக்கிறார். மேலும் அதிக சதம், அதிக போட்டிகளில் கலந்து கொண்ட வீரராகவும் இவர் இருக்கிறார். அவருடைய அறிமுக ஆட்டத்தில் நடந்த நிகழ்வுகள் யூனிஸ் வாயிலாக தற்போது மிகவும் வைரலாகி வருகிறது. “சச்சினை நான் முதல் முறையாக பார்க்கும்போது தற்போது கிரேட் சச்சினாக விளங்கும் அவர் அப்போது என்னை ஈர்க்கும் அளவிற்கு இல்லை. விளையாட்டிற்கு உள்ளேயும், வெளியேயும் பல வருடங்களாக அவர் செய்தவை அற்புதமானது. கிரிக்கெட்டில் இவ்வளவு பெயரை பதிப்பார் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. ஆனால் கடின உழைப்பு அவருக்கு இந்த பெயரை வாங்கி கொடுத்துள்ளது” எனக் குறிப்பிட்டு இருக்கிறார் யூனிஸ்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments