கைலாசா நாட்டு பெண்களை வரன் கேட்கும் நம்ம ஊரு 90 கிட்ஸ்… வைரல் சம்பவம்!!!

 

நித்யானந்தா தான் உருவாக்கிய கைலாசா நாட்டை பற்றிய அறிவிப்பை வெளியிட்டதில் இருந்தே அங்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தைப் பலரும் கிண்டலாக வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த வரிசையில் நம்ம ஊரு 90 கிட்ஸ்களும் தற்போது சேர்ந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் 90 கிட்ஸ்கள் கைலாசாவிற்கு போக வேண்டும் என்று ஆசைப்பட்டதுகூட பரவாயில்லை, கைலாசா நாட்டில் இருக்கும் பெண்களை தங்களுக்குத் திருமணம் செய்து வைத்து, அதோடு அரசாங்க வேலையும் கொடுக்குமாறு நித்யானந்தாவிடம் கோரிக்கை வைத்திருப்பதுதான் பெரும் ஆச்சர்யமே.

இதுகுறித்த கடிதம் ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் கடும் வைரலாகி வருகிறது. அந்தக் கடித்தத்தில் பல ஆண்டுகளாகத் திருமணே ஆகாமல் மன உளைச்சலில் இருக்கும் தங்களுக்கு நித்யானந்தா திருமணம் செய்து வைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டு இருக்கிறது. திருமண வேண்டுகோள்  என்ற பெயரில் உள்ள அந்தக் கடிதத்தில்,

அனுப்புதல்-1990 களில் பிறந்தவர்கள், தமிழ்நாடு எனக் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மேலும் சுவாமி, 1990-ஆம் ஆண்டு பிறந்த நாங்கள், தற்போது பல ஆண்டுகளாக திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் தவித்து வருகிறோம். எங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு பின் பிறந்தவர்களுக்கு எல்லாம் திருமணம் ஆகிவிட்டது. இதனால் நாங்கள் பெரும் மன உளைச்சலில் உள்ளோம்.

தயவு செய்து உங்கள் ஆசிரமத்தில் இருக்கும் பெண்களை எங்களுக்கு திருமணம் செய்து கொடுத்து கைலாசா நாட்டில் ஒரு குடியுருப்புடன் அரசாங்க வேலை கொடுத்து, எங்கள் மனக்கவலையை தீர்க்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் என்றும், இப்படிக்கு மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் தங்கள் சிஷ்யன்கள் 1990-ம் ஆண்டு பிறந்தவர்கள் என்றும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்தக் கடிதத்தைத் தற்போது பலரும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர். சில ஆண்டுகளாகவே 90 கிட்ஸ்களின் நிலைமையைக் குறித்து எள்ளலாக வெளிப்படுத்துவது ஒரு டிரெண்டாக மாறியிருக்கிறது. அந்த கிட்ஸ்கள் நித்யானந்தாவிடம் வரன் கேட்டதோடு, வேலை, வீடு போன்ற சீர்வரிசைகளைக் கேட்டிருப்பது மேலும் சிரிப்பை வரவழைத்து இருக்கிறது. சரி பெண்கேட்டு தூது அனுப்பியாச்சு, இனி பெண் வீட்டாரின் பதிலை எதிர்பார்க்க வேண்டியதுதான்... 

More News

கனடா பிரதமரையும் விட்டுவைக்காத 'இந்தி தெரியாது போடா': நெட்டிசன்களின் கைவரிசை!

'இந்தி தெரியாது போடா' மற்றும் 'I am a தமிழ் பேசும் இந்தியன்' போன்ற வாசகங்கள் அடங்கிய டீ-ஷர்ட்டுகளை கடந்த சில நாட்களாக திரையுலக பிரமுகர்கள் அணிந்து வைரலாகி வருகின்றனர் என்பது தெரிந்ததே 

கொரோனாவுக்கு பலியான விஜய் படத்தில் அறிமுகமான நடிகர்: திரையுலகினர் இரங்கல்

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும்

யார் இந்த நவோமி ஒசாகா… சாதித்தது என்ன???

சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் நவோமி ஒசாகா(22)  சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றார்.

சசிகலா விடுதலையாகும் தேதி: சிறை நிர்வாகம் அறிவித்துள்ளதால் பரபரப்பு!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை

துருவ் விக்ரமின் மூன்றாவது படம்தான் இயக்குனரின் மூன்றாவது படம்: சுவராசியமான தகவல் 

சீயான் விக்ரம் மகன் துருவ் விக்ரம், கடந்த ஆண்டு வெளியான 'ஆதித்யவர்மா என்ற திரைப்படத்தில் அறிமுகமானார் என்பதும் அந்தத் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே