அரபிக்கடலில் மிதந்ததா உபேர் கார்? ஃபேஸ்புக் பதிவு ஏற்படுத்திய பரபரப்பு
- IndiaGlitz, [Tuesday,February 20 2018]
உபேர் உள்பட தனியார் வாடகைக்கார் நிறுவனங்கள் தற்போது முழுக்க முழுக்க ஆன்லைன் மூலமே தங்களது சேவையை செய்துவருகின்றனர். நாம் புக் செய்த கார் எந்த இடத்தில் உள்ளது, எப்போது நம்மை வந்தடையும் என்பது உள்பட பல தகவல்களை கூகுள் மேப் மூலம் பார்த்து தெரிந்து கொள்ளலாம்
இந்த நிலையில் மும்பையை சேர்ந்த ஒருவர் உபேர் காரை புக் செய்துவிட்டு அந்த காரின் வரவுக்காக காத்திருந்தார். அப்போது அவர் கூகுள் மேப்பில் கார் எங்குள்ளது என்பதை பார்க்க முயன்றுள்ளார். அப்போது கூகுள் மேப், அவர் புக் செய்திருந்த கார், அரபிக்கடலில் உள்ளதாக காட்டியுள்ளது. இதனால் அவர் அதிர்ச்சி கலந்து ஆச்சரியம் அடைந்த அவர், இதனை அப்படியே ஸ்க்ரீன்ஷாட் எடுத்து தனது ஃபேஸ்புக்கிலும் பதிவு செய்தார்.
இந்த பதிவிற்கு பல காமெடி கமெண்டுக்கள் பதிவாகி வருகின்றது. 2018ல் மிதக்கும் கார் சேவையை உபேர் நிறுவனம் ஆரம்பித்துவிட்டார்களா? என்பது உள்பட பல கலாய்ப்பு கமெண்டுக்கள் வைரலாகி வருகின்றன. இவ்வாறு தவறான தகவலை கூகுள் மேப் காண்பிப்பது இது முதல்முறாஇ அல்ல, ஏற்கனவே ஒரு கேப் நிறுவனத்தின் கார் தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் இருப்பதாக காட்டியுள்ளது என்பது குறிப்ப்பிடத்தக்கது.
ஏற்கனவே கூகுள் மேப் ஒருசில சமயங்களில் சரியான பாதையை காட்டுவதில்லை என்று டிரைவர்கள் புகார் அளித்து வரும் நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.