ஸ்ரீதேவி மரணம் குறித்து பிரபலங்கள் கூறியது என்ன தெரியுமா?

  • IndiaGlitz, [Sunday,February 25 2018]

பிரபல நடிகை ஸ்ரீதேவி மரணம் குறித்து உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் கூறியதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் திரையுலக பிரபலங்கள் அவரது மறைவு குறித்து தங்கள் சமூக வலைத்தளங்கள் கூறியதை தற்போது பார்ப்போம்

ப்ரித்திஜிந்தா: வாழ்க்கை மிகவும் சுலபமானது மற்றும் எதிர்பாராதது! நீங்கள் எப்பொழுதும் எங்கள் இதயங்களில் வாழ்கிறீர்கள்.

அனுஷ்கா சர்மா: நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். என்னிடம் சொல்ல வார்த்தைகள் இல்லை. அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் ஆகியோர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்

அஸ்வின் ரவிச்சந்திரன்: ஸ்ரீதேவி இல்லை என்பதை புரிந்து கொள்ளவே கடினமாக உள்ளது, அவருக்கு நெருக்கமானவர்களுக்கு வலுவான தைரியம் கிடைக்க வேண்டுகிறேன்

கருணாகரன்: நீங்கள் இந்த பூமியில் அதிக காலம் வாழ்வதையே ஒவ்வொருவரும் விரும்பினோம். இதை என்னால் நம்பவே முடியவில்லை

சரத்குமார்: திறமையான நடிகையான ஸ்ரீதேவி மறைந்துவிட்டார் என்ற அதிர்ச்சி தரும் செய்தியை நம்பவே முடியவில்லை.

ஆர்யா: இது உண்மையில் இதயத்தை நொறுக்கும் செய்தி. இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவரது குடும்பத்தினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்

மாதுரி தீட்சித்: காலை எழுந்தவுடன் நான் கேட்ட முதல் அதிர்ச்சி செய்தி. என இதயம் அவருடைய குடும்பத்திற்காக அழுகிறது. இந்த உலகம் ஒரு திறமையான கலைஞரை இழந்துவிட்டது.

ப்ரியாவாரியர்: வாழ்க்கை மிகவும் எதிர்பாராதது என்பது புரிகிறது. நீங்கள் என்றும் எங்கள் இதயங்களில் வாழ்வீர்கள்