close
Choose your channels

ரஜினியின் 'கபாலி'யுடன் கனெக்சன் ஆன தனுஷின் 'விஐபி 2

Wednesday, August 9, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடிப்பில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள 'விஐபி 2' திரைப்படம் வரும் வெள்ளி அன்று பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாக அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகமும் மிகப்பெரிய வெற்றி அடையும் என்பது முன்பதிவில் இருந்தே தெரிய வருகிறது.

இந்த நிலையில் 'விஐபி 2' படத்தின் கேரள ரிலீஸ் உரிமையை மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் மேக்ஸ்லேப் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் பெற்றுள்ளது. 'விஐபி' படத்தின் முதல் பாகமும் ஏற்கனவே கேரளாவிலும் ஹிட்டாகியுள்ளதால் இந்நிறுவனம் இந்த படத்தை 200க்கும் அதிகமான திரையரங்குகளில் கேரளாவில் ரிலீஸ் செய்யவுள்ளது.

ஆகஸ்ட் 11ஆம் தேதி கேரளாவில் வேறுஎந்த பெரிய மலையாள படமும் ரிலீஸ் ஆகாததால் இந்த படம் கேரளாவில் நல்ல ஓப்பனிங் வசூலை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதே மேக்ஸ்லேப் நிறுவனம் தான் ரஜினியின் 'கபாலி' மற்றும் விஜய்யின் 'ஜில்லா' உள்பட பல வெற்றி படங்களை கேரளாவில் ரிலீஸ் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ், அமலாபால், கஜோல், சமுத்திரக்கனி, சரண்யா, விவேக், மோனல் கஜ்ஜார், ரிஷிகேஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு மற்றும் தனுஷ் இணைந்து தயாரித்துள்ளனர். சீன் ரோல்டன் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு சமீர் தாஹிர் ஒளிப்பதிவாளராகவும், சத்யராஜ் நடராஜன் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிந்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment