கலவர பூமியாக மாறிய தூத்துகுடி: முதல்வர் அவசர ஆலோசனை

  • IndiaGlitz, [Tuesday,May 22 2018]

தூத்துகுடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கடந்த 99 நாட்களாக போராடி வரும் நிலையில் இன்று 100வது நாளில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட போராட்டக்காரர்கள் திட்டமிட்டனர்.

இதனையடுத்து கலெக்டர் அலுவலகத்திற்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தும் போலீசாரின் தடுப்புகளை உடைத்து கொண்டு போராட்டக்காரர்கள் கலெக்டர் அலுவலகத்திற்குள் புகுந்தனர். போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்ததால் அதன் பின்னர் தடியடி நடத்தப்பட்டு அதனை தொடர்ந்து துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டது. இதனால் அந்த பகுதியே கலவரபூமியாக மாறியது

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தின் கண்ணாடிகள் போராட்டக்காரர்களால் அடித்து நொறுக்கப்பட்டதோடு கலெக்டர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களுக்க்கு தீவைக்கப்பட்டது. எனவே தூத்துக்குடி கலெக்டர் அலுவலகமே புகை சூழ்ந்தது போல் காணப்படுகிறது. இதனிடையே நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மதுரை, இராமநாதபுர மாவட்டங்களில் இருந்தும் சுமார் 2000 போலீசார் தூத்துகுடிக்கு விரைந்துள்ளனர்.

 

இந்த நிலையில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் வன்முறையாக மாறியது குறித்து முதலமைச்சர் பழனிசாமி காவல் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை செய்து வருகிறார்.

More News

தூத்துகுடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கி சூடு: ஒருவர் பலியானதால் பதட்டம்

தூத்துகுடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த மூன்று மாதங்களாக தொடர் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில்

'தளபதி 62' படத்திற்காக தயாராகும் பிரமாண்டமான அரசியல் கட்-அவுட்டுக்கள்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'தளபதி 62' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் ஒரு அரசியல் சம்பந்தப்பட்ட படம் என்று செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றது.

'சாமி 2' படத்தில் மிரட்டும் தேவிஸ்ரீபிரசாத்

சீயான் விக்ரம், கீர்த்திசுரேஷ் நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கி வரும் 'சாமி 2' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கின்றது.

ஜிவி பிரகாஷின் 'செம' திரை முன்னோட்டம்

ஜிவி பிரகாஷ் நடிப்பில் பாலா இயக்கிய 'நாச்சியார்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவருடைய அடுத்த படமான 'செம' வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ளது.

மே 25 ரிலீசில் இருந்து விலகிய அடுத்த திரைப்படம்

இந்த வாரம் வெள்ளிக்கிழமை ஜிவி பிரகாஷின் 'செம', அதர்வாவின் 'செம போத ஆகாதே', பரத் நடித்த 'பொட்டு', தன்ஷிகாவின் 'காலக்கூத்து' உள்பட 11 திரைப்படங்கள் ரிலீஸ் ஆகவிருப்பதாக அறிவிக்கப்பட்டது.