கலவர பூமியாக மாறிய தூத்துகுடி: முதல்வர் அவசர ஆலோசனை
Send us your feedback to audioarticles@vaarta.com
தூத்துகுடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கடந்த 99 நாட்களாக போராடி வரும் நிலையில் இன்று 100வது நாளில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட போராட்டக்காரர்கள் திட்டமிட்டனர்.
இதனையடுத்து கலெக்டர் அலுவலகத்திற்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தும் போலீசாரின் தடுப்புகளை உடைத்து கொண்டு போராட்டக்காரர்கள் கலெக்டர் அலுவலகத்திற்குள் புகுந்தனர். போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்ததால் அதன் பின்னர் தடியடி நடத்தப்பட்டு அதனை தொடர்ந்து துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டது. இதனால் அந்த பகுதியே கலவரபூமியாக மாறியது
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தின் கண்ணாடிகள் போராட்டக்காரர்களால் அடித்து நொறுக்கப்பட்டதோடு கலெக்டர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களுக்க்கு தீவைக்கப்பட்டது. எனவே தூத்துக்குடி கலெக்டர் அலுவலகமே புகை சூழ்ந்தது போல் காணப்படுகிறது. இதனிடையே நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மதுரை, இராமநாதபுர மாவட்டங்களில் இருந்தும் சுமார் 2000 போலீசார் தூத்துகுடிக்கு விரைந்துள்ளனர்.
100th day of #SterliteProtest turns into a war at #Thoothukudi #Tuticorin pic.twitter.com/fznzmDcEj4
— Antonette Presentina (@antontina) May 22, 2018
இந்த நிலையில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் வன்முறையாக மாறியது குறித்து முதலமைச்சர் பழனிசாமி காவல் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை செய்து வருகிறார்.
#Flashnews :
— தமிழன்டா (@AlaTwitz) May 22, 2018
ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி
இதனால் பொதுமக்களின் ஆவேசத்தை எதிர்கொள்ள முடியாமல் போலீஸ் தப்பி ஓட்டம்#SterliteProtest #Tuticorin #Police pic.twitter.com/8ITvVKwwDN
அடக்குமுறை அய்யோக்கியர்களை அலறவிடும் #தூத்துக்குடி_மக்கள் பொதுமக்கள் !#SterliteProtest#SterliteProtest#SterliteProtest#SterliteProtestMay22nd2018#SterliteProtest#SterliteProtestMay22nd2018 pic.twitter.com/VnZoiH5Ehl
— #sterliteprotest (@bhavishkannan) May 22, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout