close
Choose your channels

நிக்சனை கேள்வியே கேட்கவில்லை... கமல் மீது ஏமாற்றம் அடைந்த எவிக்சன் ஆன போட்டியாளர்..!

Sunday, November 12, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நிக்சன் தன்னை மோசமான முறையில் விமர்சனம் செய்த நிலையில் அது குறித்து கமல்ஹாசன் வார இறுதியில் கேட்பார் என்று எதிர்பார்த்ததாகவும், ஆனால் இந்த எபிசோடு தனக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்ததாகவும் ஏற்கனவே இந்த போட்டியில் கலந்து கொண்டு எலிமினேஷன் ஆன வினுஷா தனது சமூக வலைதளத்தில் தெரிவித்து இருந்தார்.

பிக் பாஸ் போட்டியாளர்களின் ஒருவரான நிக்சன், சக போட்டியாளரான வினுஷா குறித்து மோசமான முறையில் விமர்சனம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் நிக்சன் வினுஷாவிடம் மன்னிப்பு கேட்டு விட்டதாக விளக்கம் அளித்த நிலையில், தன்னை உருவக்கேலி செய்ததற்காக நிக்சன் மன்னிப்பு கேட்கவில்லை என்றும் அத்தனையும் பொய் என்றும் இது குறித்து வார இறுதியில் கமல்ஹாசன் நிக்சனிடம் கேள்வி கேட்பார் என்று எண்ணுகிறேன் என்றும் தெரிவித்திருந்தார்.

ஆனால் நேற்றைய எபிசோடில் கமல், பிரதீப் விஷயத்தை மட்டுமே பேசினார் என்பதும் தன்னை நல்லவர் என்று நியாயப்படுத்திக் கொள்ளவே நேற்றைய எபிசோடை பயன்படுத்திக் கொண்டார் என்றும் நெட்டிசன்கள் குற்றச்சாட்டு கூறி வருகின்றனர் இந்த பரபரப்பில் நிக்சன் குறித்து கமலுக்கு கேட்க நேரமில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது

இந்த நிலையில் இன்று வினுஷா தனது சமூக வலைதளத்தில் தனக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது என்றும் இருப்பினும் எனக்காக இந்த விஷயத்தில் ஆதரவாளித்த அனைவருக்கும் நன்றி என்றும் கூறியுள்ளார். இன்றைய எபிசோடுலாவது கமல்ஹாசன் நிக்சனிடம் கேள்வி கேட்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment