நிக்சனுக்கு பதிலடி கொடுக்க வந்திருக்கும் வினுஷா.. என்ன செய்ய போகிறார் தெரியுமா?

  • IndiaGlitz, [Tuesday,January 09 2024]

பிக் பாஸ் வீட்டில் இந்த கடைசி வாரத்தில் ஏற்கனவே எலிமினேஷன் செய்யப்பட்ட போட்டியாளர்கள் வந்து கொண்டிருக்கின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். ஏற்கனவே அனன்யா வந்த நிலையில் தற்போது வினுஷா வந்துள்ளார்.

வினுஷா வந்த உடனே விஷ்ணு மற்றும் மணி ஆகியோர்களின் விளையாட்டை பாராட்டுகிறார். குறிப்பாக விஷ்ணு, முயல் டாஸ்க்கில் சிறப்பாக விளையாடியதாக அவர் பாராட்டு தெரிவித்தார்.

இதனை அடுத்து விஷ்ணு, தினேஷ், மணி மற்றும் வினுஷா ஆகியோர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ’தம்பி நிக்சன் போன் பேசினானா? என்று தினேஷ் கேட்க அதற்கு வினுஷா, ‘பேசினான், 70 கேமராக்கள் முன்னாடி பேசினான், அதே 70 கேமரா முன்னாடி நானும் பேச போகிறேன்’ என்று கூறுகிறார்.

இதனை அடுத்து வினுஷாவை தரக்குறைவாக விமர்சனம் செய்த நிக்சனுக்கு இன்று அவர் பதிலடி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.