பிரபல குணசித்திர நடிகர் வினுசக்கரவர்த்தி காலமானார்
Send us your feedback to audioarticles@vaarta.com
இன்று இந்திய திரையுலகிற்கு போதாத நாள் போலும். இன்று காலை பழம்பெரும் பாலிவுட் நடிகர் வினோத்கண்ணா மரணம் அடைந்ததை அடுத்து சற்று முன்னர் பிரபல வில்லன் மற்றும் குணசித்திர நடிகர் வினுசக்கரவர்த்தி காலமானார். அவருக்கு வயது 74
கடந்த மூன்று ஆண்டுகளாக உடல்நலமின்றி சிகிச்சை பெற்று வந்த வினுசக்கரவர்த்தி சிகிச்சையின் பலனின்றி இன்று இரவு 7 மணிக்கு காலமானார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்பட பல மொழிகளில் சுமார் 1000 படங்களுக்கு மேல் நடித்தவர். நடிகர் மட்டுமின்றி திரைக்கதை ஆசிரியராகவும் ஒருசில படங்களில் பணியாற்றியுள்ளார். அதேபோல் படங்கள் இயக்கிய அனுபவமும் உண்டு. தமிழ் திரையுலகில் கவர்ச்சிக்கன்னியாக வலம் வந்த சில்க் ஸ்மிதாவை அறிமுகம் செய்தவர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ராசியான நடிகர் இவர் என்பதும், ரஜினியுடன் இவர் நடித்த சுமார் 25 படங்களும் சூப்பர் ஹிட் எனபதும் குறிப்பிடத்தக்கது.
வினு சக்கரவர்த்திக்கு கர்ணப்பூ என்ற மனைவியும் சரவணன் என்ற மகனும், சண்முகப்பிரியா என்ற மகளும் உள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments