இந்திய வீரரின் பதக்கம் திடீர் பறிப்பு: என்ன காரணம்?

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் இன்று காலை வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் வினோத்குமார் வெண்கல பதக்கம் வென்ற நிலையில் அந்த பதக்கம் சற்றுமுன் பறிக்கப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இன்று இந்தியாவுக்கு நல்ல நாள் என்றும் இன்றும் ஒரே நாளில் 4 பதக்கங்கள் கிடைத்தது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். ஒரு தங்கம் 2 வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கங்கள் இன்று கிடைத்த நிலையில் இந்தியாவுக்கு கிடைத்த வெண்கலப்பதக்கம் திடீரென பறிக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியாவைச் சேர்ந்த வினோத்குமார் வட்டு எறிதல் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற நிலையில் அவருக்கு பதக்கம் இல்லை என சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு வழங்கப்பட்ட பதக்கமும் திரும்ப பெறப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது.
 
மாற்றுத்திறனாளிகளுக்கான மதிப்பீட்டில் வினோத்குமார் தேர்ச்சி அடையவில்லை என்றும் அதனால் அவரது பதக்கம் திரும்பப்பெற படுவதாகவும் ஒலிம்பிக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் அனைத்து இந்தியர்களுக்கும் பெரும் அதிர்ச்சிக்குரிய தகவல் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.