இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய வீராங்கனை தகுதி நீக்கம்.. பிரபல நடிகை கண்டனம்..!
- IndiaGlitz, [Wednesday,August 07 2024]
இந்திய வீராங்கனை வினேஷ் போகத் ஒலிம்பிக் போட்டியின் 50 கிலோ மல்யுத்த பிரிவில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில் சற்றுமுன் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது இந்தியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்தியாவின் வினேஷ் போகத் அரை இறுதி போட்டியில் கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மான் லோபன் என்பவருடன் மோதினார். பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் கியூபா வீராங்கனை குஸ்மானை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.
இதனை அடுத்து இந்தியாவே இந்த வெற்றியை கொண்டாடி வந்தது என்பதும் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தால் கூட வெள்ளி பதக்கம் உறுதி என்பதை அடுத்து இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் என்ற கனவில் இருந்த நிலையில் திடீரென வினேஷ் போக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளார்
50 கிலோ எடை மல்யுத்த பிரிவில் வினேஷ் போகத் விளையாடிய நிலையில் அவரது எடை 100 கிராம் அதிகமாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்தியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் பிரபல நடிகை பார்வதி நாயர் இது குறித்து தனது சமூக வலைதளத்தில் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: வெறும் 100 கிராம் எடைக்காக வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதைக் கேட்டு முற்றிலும் அதிர்ச்சி அடைந்தேன். என் மனம் உடைந்துவிட்டது. இது அவருக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டிற்கும் பேரழிவு தரும் அடியாகும். இந்த கடினமான நேரத்தில் எங்கள் இதயம் அவருக்கு ஆறுதலாக இருக்கும். உறுதியாக இருங்கள் வினேஷ். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்.
Absolutely shocked and heartbroken to hear about Vinesh Phogat's disqualification over a mere 100 grams. This is a devastating blow not just for her, but for the entire country.
— Parvati (@paro_nair) August 7, 2024
Our hearts go out to her in this difficult time. Stay strong, Vinesh. We are with you. 💔…