விநாயக சதுர்த்தியின் கதை

  • IndiaGlitz, [Friday,August 21 2020]

விநாயக சதுர்த்தியின் கதை

உலகமுழுவதும் வாழும் இந்துக்களால் அதிகம் விரும்பி கொண்டாடப்படும் ஒரு பண்டிகை என்றால் அது விநாயக சதுர்த்திதான் என்று சொன்னால்  அது மிகை ஆகாது. அந்த சுப தினத்திலே ஒவ்வொரு வீடும் வண்ணமயமாக காட்சி அளிக்கும் காரணம் வித விதமான பிள்ளையார் சிலைகள் கொலு வைக்கப்படும்.

               

விநாயகர் சதுர்த்தி


பிள்ளையார் ஒரு சுபமான மதியம் உச்சி வெய்யில் நேரத்தில் பிறந்தார் என்பது ஐதீகம் என்பதால்    அந்நேரத்தில் அவருக்கு பூக்கள், இனிப்புகள், வாழை ஆகியவை படைக்க படுவது வழக்கம். கொழுக்கட்டை என்றால் அவருக்கு உயிர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

ஆங்கில மாதங்களில் ஆகஸ்டு அல்லது செப்டம்பர் மாதத்தில் விநாயக சதூர்த்தி கொண்டாடுவது வழக்கம்.   தீபாவளியை அடுத்து இந்த பண்டிகைதான் ஹிந்துக்களால் அதிகம் அனுசரிக்கப்படுவதும் உண்மை.  தடைகளை நீக்கி போடுவதில் வல்லவர் யானைமுகன் என்பதா சிறியவர் முதல் பெரியவர் வரை எல்லோருக்கும் பிடித்தமான இஷ்ட தெய்வம் அவர் தான்.


                                                     கணேச காயத்திரி மந்திரம்:

                                                     ‘ஓம் தத் புருஷாய வித்மஹே

                                                           வக்ர துண்டாய தீமஹி
                                                      நந்தோ தந்தி ப்ரசோதயாத்’  

 

பத்து நாட்கள் வீட்டில் வைத்து வணங்கப்படும் பிள்ளையார் சிலைகள் பின்னர் ஆனந்த சதுர்தசி அன்று நீரில் கரைக்கப்படுகின்றன.  அவரவர் வாழும் பகுதிகளுக்கேற்ப ஆறுகளிலோ, குலங்களிலோ அல்லது கடலிலோ கரைக்க படுகின்றன.  ஒரு நம்பிக்கை சொல்கிறது நீரில் கரையும் விநாயகர் அவர் தாய் தந்தை பார்வதி சிவனிடம் சென்று சேர்கிறார் என்று.  இன்னொரு நம்பிக்கை சிலைகள் வடிக்கப்படுவதும் பின் கரைக்க படுவதும் பிறப்பு இறப்பு மற்றும் பழையது புதுப்பிக்க படுவதை குறிக்கிறதென்று.

பிள்ளையாரின் கதைகளும் நம்பிக்கைகளும் இந்தியா முழுக்க வெவேறாக இருந்தாலும் நாட்டு மக்கள் அனைவருக்கும் சந்தோஷமும் புது நம்பிக்கையும் கொடுப்பது இந்த நாள்.  அதுவும் இந்த கொரோனா வைரஸால் உலகமே ஸ்தம்பித்து நிற்கும்பொழுது அதிலிருந்து மீள நமக்கு விநாயகர் துணை நிற்பர் என்பதே நிஜம்.

More News

எலும்புக் கூடுகளால் நிரம்பி வழியும் ஏரி!!! திகிலூட்டும் மர்மப் பிண்ணணி!!!

இரண்டாம் உலகப்போருக்குபின் இமயமலைப் பள்ளத்தாக்கில் ஒரு மர்ம ஏரி இருப்பதை ஹரிகிருண மதுவால் என்பவர் கண்டுபிடித்து இருக்கிறார்.

கோவில் வளாகத்தில் கொன்று புதைக்கப்பட்ட மளிகைக்கடை ஊழியர்: கள்ளக்காதலி உள்பட மூவர் கைது!

கோவில் வளாகத்தில் மளிகை கடை ஊழியர் ஒருவர் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

பிரபல ரவுடி என்கவுண்டரில் சுட்டுக்கொலை: சென்னையில் பரபரப்பு 

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தூத்துக்குடியில் துரைமுத்து என்ற ரவுடியை பிடிக்க போலீசார் சென்றபோது துரைமுத்து வீசிய வெடிகுண்டால் சுப்பிரமணியம் என்ற போலீஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

செல்ல மகளின் பெயரை அறிவித்த நடிகர் நகுல்!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய 'பாய்ஸ்' என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி அதன் பின்னர் 'காதலில் விழுந்தேன்' 'மாசிலாமணி' 'கந்த கோட்டை

பார்வையற்ற மாற்றுத்திறனாளி ரசிகருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த எஸ்பிபி: வைரலாகும் வீடியோ

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்