எனக்கு மிகவும் பிடித்தமானவர்… இந்திய நடிகை குறித்து பேசிய ஹாலிவுட் நடிகர் வின் டீசல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஹாலிவுட் நட்சத்திர நடிகரான வின் டீசல் இந்திய நடிகை ஒருவரை பாராட்டி பேசியிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஹாலிவுட்டில் ‘ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் ஸ்பை ரேசர்ஸ்‘. ‘க்ரூட்’, தி கார்டியன்ஸ் ஆஃப் கேலக்ஸி’ போன்ற பல புகழ்பெற்ற திரைப்படங்களில் நடித்து உலகம் முழுவதும் வரவேற்பு பெற்ற நடிகராக இருந்துவருபவர் நடிகர் வின் டீசல். இவருடன் இணைந்து பாலிவுட் நடிகையான தீபிகா படுகோன் XXX Return of Xander Cage எனும் ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்திருந்ததும் இதனால் உலகம் முழுக்க அவர் பிரபலமானதும் ரசிகர்கள் அறிந்ததுதான்.
ஆனால் பாலிவுட்டில் பல வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக இருந்து வரும் நடிகை தீபிகா படுகோன் குறித்து “வேலை செய்வதற்கு பிடித்த நபர்களில் ஒருவர். என்னை இந்தியாவிற்கு அழைத்து வந்தார். நான் அதை விரும்பினேன். நான் திரும்பி வருவதை எதிர்நோக்குகிறேன். எல்லாமே அன்பே எப்போதும்” என்று வின் டீசல் தற்போது பேசியிருப்பது ரசிகர்களிடையே கவனம் பெற்றிருக்கிறது.
நடிகை தீபிகா படுகோன் செரீனா உங்கராகவும், வின் டீசல் சாண்டர் கேஜாகவும் நடித்திருந்த XXX Return of Xander Cage திரைப்படம் கடந்த 2017 இல் வெளியாகி உலகம் முழுவதும் வெற்றிப்பெற்றது. இந்தத் திரைப்படத்தின் புரமோஷனுக்காக நடிகர் வின் டீசல் அப்போது இந்தியா வந்திருந்தார். மேலும் படத்தின் பிரீமியர் நிகழ்ச்சிக்கு முன்னதாக இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு இந்திய ரசிகர்களுடன் அவர் உரையாடினார்.
இந்நிகழ்வு குறித்துத்தான் தற்போது ஹாலிவுட் நடிகர் வின் டீசல் தன்னுடைய இன்ஸ்டா பதிவில் குறிப்பிட்டுள்ளார். அவர் இந்தியா அழைத்து வந்தார். மீண்டும் அந்த அழைப்பை எதிர்நோக்கி இருக்கிறேன் என்றும் வேலை செய்வதற்கு பிடித்தமான நபர் என்றும் நடிகை தீபிகா படுகோன் குறித்து நடிகர் வின் டீசல் பேசியிருப்பது இந்திய ரசிகர்களிடையே பெருமையாகப் பார்க்கப்பட்டு வருகிறது.
பாலிவுட்டில் பல வெற்றிப்படங்களில் நடித்துவரும் நடிகை தீபிகா படுகோன் கடந்த 2018 ஆம் ஆண்டு உலக அளவில் செல்வாக்கு செலுத்தும் 100 நபர்களுள் ஒருவராக தேர்வு செய்யப்பட்டார். அப்போதும் நடிகர் வின் டீசல் நடிகை தீபிகா படுகோனுக்கு பாராட்டு தெரிவித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com