'ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்' 10ஆம் பாகத்தில் 'கேப்டன் மார்வெல்' நடிகை: வின்டீசல் அறிவிப்பு

  • IndiaGlitz, [Sunday,April 10 2022]

உலகம் முழுவதும் ஆக்சன் ரசிகர்களால் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் ’பாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்’ படத்தின் தொடர் படங்கள் என்பது அனைவரும் அறிந்ததே. கடந்த 2001ஆம் ஆண்டில் ’பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ்’ திரைப்படத்தின் முதல் பாகம் வெளியான நிலையில் அதன்பின் அடுத்தடுத்து இதுவரை மொத்தம் 9 பாகங்கள் வெளியானது என்பதும், அனைத்து பாகங்களுமே வசூல் அளவில் மிகப்பெரிய சாதனை செய்தது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ’பாஸ்ட் அண்ட் பியூரியஸ்’ படத்தின் பத்தாம் பாகம் 2023 ஆம் ஆண்டு வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் நாயகனான வின்டீசல், ‘இந்த படத்தில் கேப்டன் மார்வெல் நடிகை பிரை லார்சன் (Brie Larson) இணைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அவரை தங்கள் குழுவினர்கள் வரவேற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இருவரும் இணைந்த புகைப்படத்தை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த நிலையில் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பூஜா ஹெக்டேவிடம் விஜய்யின் கிண்டலான காதல்: சன் பிக்சர்ஸ் வெளியிட்ட வீடியோ

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'பீஸ்ட்' திரைப்படம் வரும் 13-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளை விறுவிறுப்பாக சன்பிக்சர்ஸ் செய்து வருகிறது.

'திரெளபதி' இயக்குனரின் அடுத்த படத்தில் இணைந்த பிரபல நடிகர்!

 'பழைய வண்ணாரப்பேட்டை' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான மோகன் ஜி அதன் பின்னர் 'திரௌபதி' 'ருத்ரதாண்டவம்' ஆகிய படங்களை இயக்கினார்.

'போக்கிரி' படத்தில் நடித்த வில்லி நடிகையா இவர்? கணவர், குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்கள்!

தளபதி விஜய் நடித்த 'போக்கிரி' திரைப்படத்தில் வில்லியாக நடித்த நடிகை ஒருவர் கணவர் குழந்தையுடன் இருக்கும் கலர்புல் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன. 

நடிகை ரேஷ்மாவின் சகோதரர் இந்த பிரபல நடிகரா?

விஷ்ணு விஷால் நடித்த 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' என்ற திரைப்படத்தில் புஷ்பா என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ரேஷ்மா. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து

'பீஸ்ட்' படம் 'கூர்கா'  படத்தின் கதையா? யோகிபாபு என்ன சொன்னார் தெரியுமா?

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' திரைப்படம் வரும் 13ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இந்த டிரைலரை பார்த்த ஒரு சிலர் 'பீஸ்ட்' படம்