'ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்' 10ஆம் பாகத்தில் 'கேப்டன் மார்வெல்' நடிகை: வின்டீசல் அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகம் முழுவதும் ஆக்சன் ரசிகர்களால் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் ’பாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்’ படத்தின் தொடர் படங்கள் என்பது அனைவரும் அறிந்ததே. கடந்த 2001ஆம் ஆண்டில் ’பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ்’ திரைப்படத்தின் முதல் பாகம் வெளியான நிலையில் அதன்பின் அடுத்தடுத்து இதுவரை மொத்தம் 9 பாகங்கள் வெளியானது என்பதும், அனைத்து பாகங்களுமே வசூல் அளவில் மிகப்பெரிய சாதனை செய்தது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் ’பாஸ்ட் அண்ட் பியூரியஸ்’ படத்தின் பத்தாம் பாகம் 2023 ஆம் ஆண்டு வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் நாயகனான வின்டீசல், ‘இந்த படத்தில் கேப்டன் மார்வெல் நடிகை பிரை லார்சன் (Brie Larson) இணைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அவரை தங்கள் குழுவினர்கள் வரவேற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இருவரும் இணைந்த புகைப்படத்தை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த நிலையில் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Brie Larson has been cast in #Fast10 per Vin Diesel’s instagram pic.twitter.com/Lu2Gyne6Rw
— Matt Neglia (@NextBestPicture) April 10, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com