close
Choose your channels

விமல் நடித்த அடுத்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்!

Tuesday, July 16, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் விமல் நடித்த 'களவாணி 2' திரைப்படம் சமீபத்தில் வெளியாகிய நிலையில் தற்போது அவருடைய அடுத்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

விமலுடன் வரலட்சுமி ஜோடியாக சேர்ந்து நடித்த திரைப்படம் 'கன்னிராசி'. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து சென்சாரிலும் 'யூ' சான்றிதழ் பெற்று கடந்த சில மாதங்களுக்கு முன்பே ரிலீசுக்கு தயாராகிவிட்டது.

ஆனால் நீண்டகாலமாக ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் இருந்த இந்த படம் தற்போது வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த படத்தின் டிரைலர் இன்று வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு இதுகுறித்த புதிய போஸ்டர் ஒன்றும் வெளியாகியுள்ளது

விமல், வரலட்சுமி சரத்குமார், பாண்டியராஜன், யோகி பாபு, ரோபோ சங்கர், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை முத்துகுமரன் இயக்கியுள்ளார். விஷால் சந்திரசேகர் இசையில், செல்வகுமார் ஒளிப்பதிவில் ராஜாமுகமது படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை கிங் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment