கோலிவுட்டின் ஈபிஎஸ் இவர்தான்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தை பொறுத்தவரை ஈபிஎஸ் என்றால் உடனே அனைவருக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பெயர் தான் ஞாபகம் வரும். ஆனால் நேற்று திடீரென சமூக வலைப்பக்கத்தில் கோலிவுட்டின் இபிஎஸ் என ஒரு விளம்பரம் வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
அந்த விளம்பரத்தில் உள்ள புதிருக்கு சற்றுமுன் விடை கிடைத்துள்ளது. ஈபிஎஸ் என்பது ‘எங்க பாட்டன் சொத்து’ என்ற படத்தின் டைட்டில் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மக்கள் அரசன் பிக்சர்ஸ் சார்பில் அழகர்சாமி தயாரிக்கும் இந்தப் படத்தில் விமல் நாயகனாக நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தை சற்குணம் இயக்க உள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சற்குணம் இயக்கிய ’களவாணி’, ’வாகை சூடவா’, ’மஞ்சப்பை’ ‘களவாணி 2’ ஆகிய படங்களில் விமல் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே.
நாளை பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகவுள்ள ‘எங்க பாட்டன் சொத்து’ என்ற படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது
Makkal Arasan pictures presents#EngaPattansothu - EPS#EPSthemovie. First look tomorrow@ActorVemal @SarkunamDir @DoneChannel1 @CtcMediaboy pic.twitter.com/ZZEGAZuQHM
— Diamond Babu (@idiamondbabu) November 12, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com