விமலை இதற்கு முன் இப்படி பார்த்திருக்க மாட்டீர்கள்: "விலங்கு" வெப்தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரை உலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான விமல் முதல் முறையாக "விலங்கு" என்ற வெப்தொடரில் நடித்துள்ள நிலையில் இந்தத் தொடர் ஜீ5 தமிழ் ஓடிடியில் பிப்ரவரி 18 முதல் வெளியாகிறது. இதனை முன்னிட்டு இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர் பேசியதை தற்போது பார்ப்போ,ம்.
ஷுஜு பிரபாகரன், Cluster Head ZEE Network, பேசியதாவது: ஜீ5 க்கு நீங்கள் அளித்து வரும் ஆதரவிற்கு நன்றி. எங்கள் கடந்த மாத வெளியீடான முதல் நீ முடிவும் நீ படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. ஒரு வருட இடைவெளிக்கு பின், நாங்கள் விலங்கு மூலம் வெப் சிரீஸ் மீண்டும் கொண்டு வந்துள்ளோம். ஆனால் இதனை தொடர்ந்து இன்னும் நிறைய தொடர்கள் செய்ய நினைத்துள்ளோம். நான் இந்த சீரிஸை பார்த்து விட்டேன். கண்டிப்பாக ரசிகர்களுக்கு பிடிக்கும், வயலன்ஸ், செக்ஸை தாண்டி வேறொரு பாணியில் ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் இந்த தொடர் இருக்கும். தயாரிப்பாளர் மதன், தொடரில் நடித்த விமல், இனியா, பாலசரவணன், இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் ஆகியோருக்கும், படக்குழுவினருக்கும் நன்றி. ஜீ5 யை பொறுப்பாக எடுத்து செல்லும், எங்கள் குழுவில் உள்ள அனைவருக்கும் நன்றி.
கௌசிக் நரசிம்மன், VP Content, ZEE5 Tamil பேசியதாவது: ரொம்ப பெருமையாக இருக்கிறது, விலங்கு தொடர் மிகப்பெரிய பயணம், பிரசாந்த் கதை சொன்ன இடத்திலிருந்து இன்று உங்கள் முன் வந்ததுள்ளது பெருமை. விமலை இதற்கு முன் இப்படி பார்த்திருக்க மாட்டீர்கள், பாலசரவணன் சூப்பராக நடித்துள்ளார். அனைவரும் அற்புதமாக உழைத்துள்ளார்கள். பிரசாந்த் நன்றாக இயக்கியுள்ளார். தொடர்ந்து ஜீ5ல் நல்ல கதைகள் வரும், ஆதரவு தாருங்கள் நன்றி.
ஜீ5 சார்பில் லாயிட் பேசியதாவது: ஜீ5 ல் எங்கள் படைப்புகளுக்கு ஆரம்பத்தில் இருந்து ஆதரவு தரும் உங்களுக்கு நன்றி. நாங்கள் விலங்கு மூலம் மீண்டும் ஒரு நல்ல குழுவுடன், நல்ல படைப்புடன் வந்துள்ளோம். இந்த விலங்கு தொடர் உங்களுக்கு பிடிக்கும் நன்றி.
எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் பேசியதாவது: நீண்ட இடைவேளைக்கு பிறகு எனக்கு இது கம்பேக். 3 வருடங்களுக்கு முன் ஆபிஸில் நான் தனியாக இருந்தபோது, ஐயப்பனை அழைத்தேன், அவன் தான் பிரசாந்த்தை கூட்டி வந்தார். அவர் சொன்ன கதை நன்றாக இருந்தது. திருச்சியிலேயே ஷூட்டிங் எடுத்துள்ளோம். தொடர் பார்க்கும் போது அது ஏன் என்பது, உங்களுக்கு தெரியும். பிரசாந்த் ஒரு நல்ல இயக்குநர் நாங்கள் சேர்ந்து படம் செய்தாலும் இல்லை என்றாலும் எங்களுக்குள் இருக்கும் நட்பு தொடர்ந்து இருக்கும். அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. விமல் அவர்களை தொடர்ந்து கவனித்து வருகிறேன், என் மேல் மிகுந்த அக்கறை கொண்டவர். அவருக்கு இந்த தொடர் ஒரு திருப்பு முனையாக இருக்கும். ஜீ5 எனக்கு கிடைத்தது எனக்கு வரம், சிஜு இந்த தொடரில் காட்டிய அக்கறை மிகப்பெரியது. பாலசரவணனை வேறொரு கோணத்தில் இதில் பார்க்கலாம். கணேஷ் அற்புதமாக படத்தொகுப்பு செய்துள்ளார். நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி ஒரு அட்டகாசமான ரோலில் நடித்துள்ளார். இந்த தொடர் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் ஆதரவு தாருங்கள் நன்றி.
ஐயப்பன் பேசியதாவது: இது முழுக்க முழுக்க ஒரு டீம் ஒர்க் தான். இந்த டீமில் கொரானா தொற்றால் இருவர் இன்று உயிருடன் இல்லை. RNR மனோகர் சாரும், தீபக்கும் அவர்கள் இருவரின் ஆசி கண்டிப்பாக இந்த தொடருக்கு இருக்கும். இந்ததொடர் கண்டிப்பாக உங்கள் எல்லோரையும் கவரும் நன்றி.
படத்தொகுப்பாளர் கணேஷ் பேசியதாவது: மதன் சார், இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் அனைவருக்கும் நன்றி. இந்த தொடரை பொறுத்தவரை ரேஸியாக இல்லாமல் நின்று கதை சொல்லும்படியான எடிட் பேட்டர்னில் எடிட் செய்துள்ளோம் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம் நன்றி.
நடிகர் பாலசரவணன் பேசியதாவது: நான் நடித்த படங்களில் என்னை பற்றி எழுதி ஆதரவளித்த பத்திரிக்கை நண்பர்களுக்கு நன்றி. விலங்கு தொடர் எனக்கு முக்கியமானது. பிரசாந்த் எனக்கு உயிர் நண்பன், அவனிடம் காமெடியனாக நடிக்கிறேன், குணசித்திரத்தில் நடிக்க வேண்டும் என சொன்னேன் அப்போது தான் இந்தக் கதை சொல்லி இதில் வரும் கதாபாத்திரத்தில் நடிக்க சொன்னார். ஒரு பெரிய நடிகர் நடிக்க வேண்டிய பாத்திரம் என்னை நம்பி கொடுத்த நண்பனுக்கு நன்றி. அதற்கு ஒத்துழைப்பு தந்த மதன் சாருக்கு நன்றி. இந்த தொடரில் எனக்கு ஒரு உறவு கிடைத்துள்ளது. அது விமல் அண்ணன் அவருக்கு நன்றி. விலங்கு உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
இசையமைப்பாளர் அஜீஷ் பேசியதாவது: பிரசாந்த் என்ன வேண்டுமோ அதை சரியாக சொல்லி வாங்கி விடுவார். விமல் அண்ணா சூப்பராக நடித்துள்ளார். பாலசரவணன் இதில் வித்தியாசமாக நடித்துள்ளார் கண்டிப்பாக பெரிதாக பேசப்படுவார். இந்த டீம் ரொம்ப வலுவான டீம். எல்லோரும் அற்புதமாக உழைத்துள்ளார்கள். நாங்கள் விரும்பி உழைத்த தொடர் விலங்கு, உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன் நன்றி.
இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் பேசியதாவது: புரூஸ்லிக்கு பிறகு 4 வருஷம் நிறைய கஷ்டப்பட்டேன். இந்த கதையை முதலில் ஐயப்பன் அண்ணன் தான் கேட்டார். வேறொரு கதைக்காக போலீஸ் பற்றி விசாரித்து அவர்களை சந்தித்த போது அவர்கள் சொன்னதை கதையாக எடுக்கலாம் என தோன்றியது. முதலில் படமாக பண்ணலாம் என முடிவு செய்திருந்தோம். பின்னர் கதை பெரியது என்பதால் தொடராக எடுத்துவிட்டோம். திருச்சியில் ஒரு போலீஸ் ஸ்டேஷனை செட் போட்டு எடுத்துள்ளோம். எல்லோரும் சென்னையில் எடுங்கள் என்று சொல்லியும் தயாரிப்பாளர் மதன் அங்கு தான் எடுக்க வேண்டும் என்றார். அந்த அளவு கதையை நம்பினார். அவருக்கு நன்றி. கௌஷிக் இந்த புராஜக்ட் மீது காட்டிய அக்கறை எனக்கு மகிழ்ச்சியை தந்தது. பாலசரவணன் நான் நினைத்ததை விட அற்புதமாக நடித்துள்ளார். விமல் அண்ணாவுக்கு நான் முதலில் சொன்ன கதை பிடிக்கவில்லை இந்தக்கதை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. நான் ஓகே சொன்னாலும் இன்னும் சரியாக வரவில்லை என மீண்டும் நடிப்பார். முழுக்க முழுக்க பரிதியாக மாறியுள்ளார். இந்த தொடர் நன்றாக வந்துள்ளது. பார்த்துவிட்டு ஆதரவு தாருங்கள் நன்றி.
நடிகை இனியா பேசியதாவது: ஒரு நல்ல படம் மூலம் உங்களை சந்திப்பது மகிழ்ச்சி. இது எனது முதல் வெப் தொடர் அதுவும் எனது முதல் படத்து ஹீரோவுடன் நடிப்பது மகிழ்ச்சி. அவர் சினிமாவை இப்போது சீரியஸாக பார்க்கிறார். இந்த தொடர் நன்றாக வந்துள்ளது. 9 மாத கர்ப்பிணி பாத்திரத்தில் நடித்துள்ளேன். அதற்காக கொஞ்சம் எடை கூடி நடித்திருக்கிறேன். அடுத்தடுத்து எனக்கு நல்ல கதாபாத்திரங்கள் வருவது மகிழ்ச்சி. விலங்கு தொடர் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
நடிகர் விமல் பேசியதாவது: உங்களை பல வருடங்களுக்கு முன் சந்திக்கிறேன். இந்தக் கதை முதலில் சொன்ன போது படமாக இருந்தது ஆனால் கதை சொல்ல சொல்ல இது பெரியதாக இருந்ததால் எல்லோரும் தொடராக எடுக்கலாம் என்றார்கள். எனக்கும் புதிதாக இருந்தது. நான் ஹீரோ ஆனால் படமே இல்லாமல் வீட்டில் இருந்தேன், தயாரிப்பாளர் அண்ணன் பிஸியாக இருந்தவர் அவரும் படம் இல்லாமல் இருந்தார், ஒரு படம் தோல்வி கொடுத்த பிரசாந்த் எல்லோரும் இணைந்து எங்கள அனுபவத்தை பயன்படுத்தி இந்த தொடரை செய்துள்ளோம். எங்களை நம்பி ஜீ5 இதை முன்னெடுத்துள்ளார்கள். உங்களை ஏமாற்ற மாட்டோம். இந்த தொடர் மூலம் எனக்கு தம்பியாக பாலசரவணன் கிடைத்துள்ளான். இனிமே நான் கதைகளை கவனமாக தேர்ந்தெடுத்து செய்வேன் என்னுடைய கம்பேக்காக விலங்கு இருக்கும் கண்டிப்பாக உங்கள் எல்லோருக்கும் இந்த தொடர் பிடிக்கும் நன்றி.
7-எபிஸோடுகள் கொண்ட இந்த வெப் சீரிஸ், ஒரு புலனாய்வு தொடராக க்ரைம் ஜானரில் உருவாகியுள்ளது, இத்தொடரில் திருச்சிக்கு அருகிலுள்ள காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக இருக்கும் பரிதி என்ற பாத்திரத்தில், கதாநாயகனாக விமல் நடித்துள்ளார். இனியா, முனிஷ்காந்த், பால சரவணன், RNR மனோகர், ரேஷ்மா ஆகியோருடன் மற்றும் பல முன்னணி நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.
விலங்கு தொடரை இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ளார், எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் சார்பில் மதன் தயாரித்துள்ளார். அஜீஷ் இசையமைக்க, கணேஷ் படத்தொகுப்பு செய்ய, ஒளிப்பதிவை தினேஷ் குமார் புருஷோத்தமன் கையாண்டுள்ளார். ஜீ5 ஒரிஜினல் தொடரான "விலங்கு" பிப்ரவரி 18, 2022 முதல் ஒளிபரப்பாகவுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments