'எனக்கு இந்த வேலை ரொம்ப முக்கியம்' விமலின் 'விலங்கு' 2வது டிரைலர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் விமல் நடித்த வெப் தொடர் ‘விலங்கு’ பிப்ரவரி 18ஆம் தேதி ஜீ ஓடிடியில் வெளியாக உள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். மேலும் இந்தத் தொடரின் முதல் டிரைலர் பல திகில் காட்சிகளுடன் இருந்தது என்பதும் இந்த தொடரின் எதிர்பார்ப்பை அதிகரித்தது என்பதும் தெரிந்ததே.
காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் விமல் அவ்வப்போது நடக்கும் கொலைகள் குறித்து விசாரணை செய்வதும் கிராமத்தில் நடக்கும் திகில் காட்சிகள் பார்ப்பவரை அச்சப்பட செய்யும் அளவுக்கு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள 2வது டிரைலரிலும் அதே போன்ற திகில் மற்றும் மர்மமான காட்சிகள் உள்ளன. மேலும் ஒருசில சென்டிமென்ட் காட்சிகளும் உள்ளன என்பதும் குறிப்பாக 'எனக்கு இந்த வேலை ரொம்ப முக்கியம் என விமல் பேசும் வசனம் நெகிழ்ச்சியாக உள்ளதை அடுத்து இந்த வெப்தொடர் அனைவரையும் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரசாந்த் பாண்டியராஜன் என்பவர் இயக்கத்தில், எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் சார்பில் மதன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அஜீஷ் இசையமைத்துள்ளார் விமலுடன் இனியா, முனிஷ்காந்த், பால சரவணன், RNR மனோகர், ரேஷ்மா ஆகியோர் நடித்துள்ளனர்.
Happy to release the trailer of #Vilangu https://t.co/JRMCBDoGNv
— Pandiraj (@pandiraj_dir) February 12, 2022
Premiers 18th February on @ZEE5Tamil @ActorVemal @p_santh @madan2791 @Bala_actor @actorrammunish @IamIneya @DKP_DOP @ajesh_ashok @thecutsmaker
#VilanguOnZEE5 #ZEE5originals #Zee5
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments