சூர்யா பாணி வில்லன் கேரக்டரில் விமல்
- IndiaGlitz, [Monday,June 06 2016]
பாண்டிராஜ் இயக்கிய 'பசங்க' படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பெற்ற நடிகர் விமல் இதுவரை கிட்டத்தட்ட ரொமான்ஸ் மற்றும் கிராமத்து அப்பாவி வேடங்களை மட்டுமே ஏற்று நடித்துள்ளார். பசங்க, களவாணி, வாகை சூடவா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மஞ்சப்பை போன்ற படங்கள் விமலின் நடிப்பை மெருகேற்றின.
இந்நிலையில் முதன்முதலாக ஆக்ரோஷமான வில்லன் கேரக்டர் ஒன்றில் விமல் நடிக்கவுள்ளதாகவும் இந்த படம் விமலுக்கு ஒரு திருப்புமுனையை கொடுக்கும் என்றும் கூறப்படுகிறது. 'அஞ்சான்' படத்தில் சூர்யா நடித்த 'ராஜூபாய்' கேரக்டரை ஒட்டி அமைந்திருக்கும் கேரக்டரை விமல் ஏற்க உள்ளதாகவும், இந்த படத்தில் 'அறிந்தும் அறியாமலும்' பட நடிகர் நவ்தீப் ஹீரோவாக நடிப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.