சூர்யா பாணி வில்லன் கேரக்டரில் விமல்

  • IndiaGlitz, [Monday,June 06 2016]

பாண்டிராஜ் இயக்கிய 'பசங்க' படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பெற்ற நடிகர் விமல் இதுவரை கிட்டத்தட்ட ரொமான்ஸ் மற்றும் கிராமத்து அப்பாவி வேடங்களை மட்டுமே ஏற்று நடித்துள்ளார். பசங்க, களவாணி, வாகை சூடவா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மஞ்சப்பை போன்ற படங்கள் விமலின் நடிப்பை மெருகேற்றின.

இந்நிலையில் முதன்முதலாக ஆக்ரோஷமான வில்லன் கேரக்டர் ஒன்றில் விமல் நடிக்கவுள்ளதாகவும் இந்த படம் விமலுக்கு ஒரு திருப்புமுனையை கொடுக்கும் என்றும் கூறப்படுகிறது. 'அஞ்சான்' படத்தில் சூர்யா நடித்த 'ராஜூபாய்' கேரக்டரை ஒட்டி அமைந்திருக்கும் கேரக்டரை விமல் ஏற்க உள்ளதாகவும், இந்த படத்தில் 'அறிந்தும் அறியாமலும்' பட நடிகர் நவ்தீப் ஹீரோவாக நடிப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

More News

தனுஷின் 'தொடரி' டிராக்லிஸ்ட்.

தனுஷ் நடிப்பில் பிரபுசாலமன் இயக்கிய 'தொடரி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது...

'கான்' படத்திற்கு மீண்டும் திரும்புகிறாரா செல்வராகவன்?

பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடித்து வந்த 'கான்' திரைப்படம் ஒருசில வாரங்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்தப்பட்ட நிலையில் திடீரென கைவிடப்பட்டதாக செய்திகள் வெளிவந்தது...

ரஜினி-அஜித் படத்தொடர்ச்சியில் சிம்பு?

'தல அஜித்துக்கு கோலிவுட்டில் உள்ள ஏகப்பட்ட நட்சத்திரங்கள் ரசிகர்களாக இருப்பது நாம் அறிந்ததே. ஆனால் சிம்பு போன்ற நடிகர்கள் அஜித்தின் தீவிர ரசிகர்களாக இருந்து வருகின்றனர்...

கமல், அஜித், விக்ரம் வரிசையில் விஜய்சேதுபதி....

கோலிவுட் திரையுலகில் கமல்ஹாசன், அஜித், விக்ரம், தனுஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் ஒரே படத்தில் விதவிதமான தோற்றங்களில் நடித்துள்ளதை பார்த்துள்ளோம்.

'இறைவி'யில் தயாரிப்பாளர் வேடத்தை மறுத்த பிரபல நடிகர்

பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'இறைவி' திரைப்படம் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தள விமர்சகர்களின் பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக பெரும் வரவேற்பை பெற்றுள்ளது