விமல் லட்சியத்தை உடைத்தாரா வரலட்சுமி? கலகலப்பாக உருவாகும் ' கன்னிராசி'

  • IndiaGlitz, [Friday,February 16 2018]

சமீபத்தில் நடிகர் விமல் நடித்த 'மன்னார் வகைறயா' ரசிகர்களின் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றுள்ள நிலையில் அவர் தற்போது ஐந்து படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடித்து வரும் படங்களில் ஒன்று 'கன்னிராசி

கிங் மூவி மேக்கர்ஸ் P.ஷமீம் இப்ராகிம் தயாரிப்பில், எஸ்.முத்துக்குமரன் இயக்கும் இப்படத்தில் விமலுக்கு ஜோடியாக முதல்முறையாக, வரலட்சுமி நடித்து வருகிறார். எஸ்.செல்வகுமார் ஒளிப்பதிவில், விஷால் சந்திரசேகர் இசையமைப்பில் ராஜா முகமது எடிட்டிங் பணியில் இந்த படம் வளர்ந்து வருகிறது.

இந்த படத்தின் கதை குறித்து இயக்குனர் செல்வகுமார் கூறியபோது, படத்தில் கதாநாயகன் விமல் குடும்பத்தினர் அனைவருக்கும் கன்னிராசி. எல்லோருமே காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். ஆனால் விமல், பெற்றோர்கள் நிச்சயிக்கும் பெண்ணைத் தான் திருமணம் செய்து கொள்வது என்ற லட்சியத்துடன் இருக்கிறார். இந்த நிலையில் விமல் வீட்டின் எதிர் வீட்டிற்கு வரலட்சுமி குடும்பத்தினர் குடி வருகிறார்கள். இரண்டு குடும்பத்தினர்களும் சந்தித்து கொள்ளும்போது என்ன நடக்கிறது என்பதை நகைச்சுவையுடன் சொல்லியிருக்கின்றோம். இப்படத்தில் விமலும், வரலட்சுமியும் முதன்முறையாக இணைந்து நடிக்கின்றனர். படம் முழுவதுமே விமலும், வரலட்சுமியும் செய்கின்ற காதல் காட்சிகளும், காமெடி காட்சிகளும் மக்களின் பேராதரவைப் பெறுவது நிச்சயம்.' என்று கூறியுள்ளார்.

More News

முடிவுக்கு வந்தது தனுஷின் மாஸ் கேங்க்ஸ்டர் திரைப்படம்

தனுஷ் நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வந்த 'வடசென்னை' திரைப்படத்தின் முதல்பாக படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.

கமல்ஹாசனுக்கு திருமாவளவன் அழைப்பு: அணி சேருவார்களா?

உலக நாயகன் கமல்ஹாசன் வரும் 21ஆம் தேதி புதிய அரசியல் கட்சியை இராமநாதபுரத்தில் உள்ள முன்னாள் குடியரசு தலைவரின் இல்லத்தில் அறிவிக்கவுள்ளார்.

சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி

சிவகார்த்திகேயன் தற்போது 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்' படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

அமலாபால் காதலர் தினத்தை யாருடன் கொண்டாடினார் தெரியுமா?

கடந்த சில மாதங்களாகவே நடிகை அமலாபால் ஊடகங்களின் தலைப்பு செய்திகளில் இடம்பெற்று கொண்டிருக்கின்றார்,.

கார்த்திக் நரேன் இயக்கும் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான 'துருவங்கள் 16' படத்தின் மூலம் கோலிவுட்டின் கவனத்தை தனது பக்கம் திருப்பிய 22 வயது இளைஞர் கார்த்திக் நரேன்.