ஆசிரியர்ன்னா தப்ப திருத்துவறவன்: விமல் நடித்த 'சார்' டிரைலர்..!

  • IndiaGlitz, [Wednesday,September 18 2024]

விமல் நடித்த சார் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு முடிவடைந்து, தொழில்நுட்ப பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டு, இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சார் திரைப்படத்தில், விமல் ஒரு கிராமத்தின் பள்ளி ஆசிரியராக நடிக்கிறார். அதே பள்ளியில் ஆசிரியை ஆக இருக்கும் ஒருவரை அவர் காதலிக்கிறார். இந்த நேரத்தில், அந்த கிராமத்தில் உள்ள பெரிய மனிதர் ஒருவர், குழந்தைகள் பள்ளியில் படிக்கக்கூடாது என்று கூறி, பள்ளியை மூடுகிறார்.

இதற்கு எதிராகப் போராடும் விமலுக்கு ஏற்படும் சிக்கல்கள், இடையூறுகள், இன்னல்களை அவர் எப்படி சமாளிக்கிறார் என்பதும், அந்த கிராமத்தில் பள்ளியை மீண்டும் எப்படி துவக்குகிறார் என்பதும் தான் படத்தின் கதை என ட்ரெய்லரிலிருந்து தெரிகிறது.

கன்னி மாடம் படத்தை இயக்கிய புகழ்பெற்ற குணச்சித்திர நடிகர் போஸ் வெங்கட் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில், விமல், சாயாதேவி, சிராஜ், சரவணன், ரமா, ஜெயபாலன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இனியன் ஹரிஷ் ஒளிப்பதிவு செய்ய, சித்து குமார் இசையமைத்திருக்கிறார். சரண் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இப்படத்தை இயக்குநர் வெற்றிமாறனின் நிறுவனம் தயாரித்துள்ளது என்பதும், படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

விஜய் தவறான பாதையில் செல்கிறார்: பிரபல இயக்குனர்

நடிகர் விஜய் தவறான பாதையில் செல்வதாகவும் அதனால் வருத்தமாக இருப்பதாகவும் பிரபல இயக்குனர் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முத்தங்களை பரிமாறிய நயன் - விக்கி.. என்ன விசேஷம்? ரொமான்ஸ் புகைப்படங்கள்..!

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா இருவரும் முத்தங்களை பரிமாறிய புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகி வருகிறது. இருவருக்கும் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பதிவுக்கு லைக் போட்ட தனுஷ்.. மீண்டும் இணைகிறார்களா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் அவரது கணவர் தனுஷ் ஆகிய இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்ததாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்ட நிலையில்,

வெறும் 10 நொடிகள் தான்... வியப்பில் இருந்து வெளி வருவதற்குள் அது நடந்துவிட்டது.. அஜித் சந்திப்பு குறித்து கவின்..!

நடிகர் அஜித்தை கவின் மற்றும் நெல்சன் சந்தித்த புகைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன் இணையத்தில் வெளியாகி வைரல் ஆன நிலையில், இந்த சந்திப்பு குறித்து சமீபத்தில் நடந்த சினிமா விழாவில் கவின்

எங்க அம்மாவுக்கு கொடுத்த அன்பை எனக்கும் கொடுங்க.. ஸ்ரீதேவி மகள் நெகிழ்ச்சி பேச்சு..!

பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் நடித்த 'தேவாரா' என்ற படத்தின் புரமோஷன் விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் மறைந்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி