close
Choose your channels

ஆசிரியர்ன்னா தப்ப திருத்துவறவன்: விமல் நடித்த 'சார்' டிரைலர்..!

Wednesday, September 18, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விமல் நடித்த "சார்" என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு முடிவடைந்து, தொழில்நுட்ப பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டு, இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

"சார்" திரைப்படத்தில், விமல் ஒரு கிராமத்தின் பள்ளி ஆசிரியராக நடிக்கிறார். அதே பள்ளியில் ஆசிரியை ஆக இருக்கும் ஒருவரை அவர் காதலிக்கிறார். இந்த நேரத்தில், அந்த கிராமத்தில் உள்ள பெரிய மனிதர் ஒருவர், "குழந்தைகள் பள்ளியில் படிக்கக்கூடாது" என்று கூறி, பள்ளியை மூடுகிறார்.

இதற்கு எதிராகப் போராடும் விமலுக்கு ஏற்படும் சிக்கல்கள், இடையூறுகள், இன்னல்களை அவர் எப்படி சமாளிக்கிறார் என்பதும், அந்த கிராமத்தில் பள்ளியை மீண்டும் எப்படி துவக்குகிறார் என்பதும் தான் படத்தின் கதை என ட்ரெய்லரிலிருந்து தெரிகிறது.

"கன்னி மாடம்" படத்தை இயக்கிய புகழ்பெற்ற குணச்சித்திர நடிகர் போஸ் வெங்கட் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில், விமல், சாயாதேவி, சிராஜ், சரவணன், ரமா, ஜெயபாலன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இனியன் ஹரிஷ் ஒளிப்பதிவு செய்ய, சித்து குமார் இசையமைத்திருக்கிறார். சரண் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இப்படத்தை இயக்குநர் வெற்றிமாறனின் நிறுவனம் தயாரித்துள்ளது என்பதும், படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment