700 கிமீ நடந்து வந்த விழுப்புரம் இளைஞரை கைது செய்த போலீஸ்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஹைதராபாத்திலிருந்து சொந்த ஊரான விழுப்புரத்திற்கு சுமார் 700 கிலோமீட்டர் நடந்து வந்த இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ் என்ற 26 வயது இளைஞர் ஹைதராபாத்தில் உள்ள ஆன்லைன் நிறுவனம் ஒன்றில் பணி செய்து வருகிறார். கடந்த 24 ஆம் தேதி முதல்கட்ட ஊரடங்கு அறிவித்ததில் இருந்து அவர் ஊர் திரும்ப முடியாமல் சிக்கலில் இருந்தார். இந்த நிலையில் ஐதராபாத்தில் இருந்து நடந்தே விழுப்புரம் வர அவர் முடிவு செய்தார்.
ஹைதராபாத்திலிருந்து ஏப்ரல் 14ஆம் தேதி நடக்க தொடங்கிய சதீஷ், கடப்பா, சித்தூர், வேலூர் வழியாக சுமார் 700 கிலோமீட்டர் நடந்து நேற்று அவர் திருவண்ணாமலையை அடைந்தார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அதன் பின் அனுப்பி வைக்கப்பட்டார். திருவண்ணாமலை எல்லை வந்தபோது உறவினர் ஒருவரை தொடர்புகொண்டு நடந்து வருவதை கூறினார். இதனையடுத்து அந்த உறவினர் இருசக்கர வாகனத்தில் சதீஷை அழைத்து வரும் சென்றார். இருவரும் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது திடீரென மறித்த போலீசார் இருவரையும் கைது செய்து இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த முன்னாள் அமைச்சர் ஒருவர் திருவண்ணாமலை எஸ்பியிடம் பேசி அவர்களை விடுவிக்க சொன்னதை அடுத்து சதீஷ் மற்றும் அவருடைய உறவினரை போலீசார் விடுவித்தனர். அதன் பின்னர் அவர் மீண்டும் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்து தற்போது வீட்டிற்கு வந்துள்ளார் . ஹைதராபாத்தில் இருந்து 700 கிலோ மீட்டர் தனது சொந்த ஊருக்கு நடந்தே வந்த விழுப்புரம் இளைஞரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments