700 கிமீ நடந்து வந்த விழுப்புரம் இளைஞரை கைது செய்த போலீஸ்!

ஹைதராபாத்திலிருந்து சொந்த ஊரான விழுப்புரத்திற்கு சுமார் 700 கிலோமீட்டர் நடந்து வந்த இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ் என்ற 26 வயது இளைஞர் ஹைதராபாத்தில் உள்ள ஆன்லைன் நிறுவனம் ஒன்றில் பணி செய்து வருகிறார். கடந்த 24 ஆம் தேதி முதல்கட்ட ஊரடங்கு அறிவித்ததில் இருந்து அவர் ஊர் திரும்ப முடியாமல் சிக்கலில் இருந்தார். இந்த நிலையில் ஐதராபாத்தில் இருந்து நடந்தே விழுப்புரம் வர அவர் முடிவு செய்தார்.

ஹைதராபாத்திலிருந்து ஏப்ரல் 14ஆம் தேதி நடக்க தொடங்கிய சதீஷ், கடப்பா, சித்தூர், வேலூர் வழியாக சுமார் 700 கிலோமீட்டர் நடந்து நேற்று அவர் திருவண்ணாமலையை அடைந்தார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அதன் பின் அனுப்பி வைக்கப்பட்டார். திருவண்ணாமலை எல்லை வந்தபோது உறவினர் ஒருவரை தொடர்புகொண்டு நடந்து வருவதை கூறினார். இதனையடுத்து அந்த உறவினர் இருசக்கர வாகனத்தில் சதீஷை அழைத்து வரும் சென்றார். இருவரும் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது திடீரென மறித்த போலீசார் இருவரையும் கைது செய்து இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த முன்னாள் அமைச்சர் ஒருவர் திருவண்ணாமலை எஸ்பியிடம் பேசி அவர்களை விடுவிக்க சொன்னதை அடுத்து சதீஷ் மற்றும் அவருடைய உறவினரை போலீசார் விடுவித்தனர். அதன் பின்னர் அவர் மீண்டும் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்து தற்போது வீட்டிற்கு வந்துள்ளார் . ஹைதராபாத்தில் இருந்து 700 கிலோ மீட்டர் தனது சொந்த ஊருக்கு நடந்தே வந்த விழுப்புரம் இளைஞரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

More News

பால்கனி அரசு என விமர்சனம் செய்த கமலுக்கு அமைச்சர் பதிலடி

கடந்த சில மாதங்களாகவே உலக நாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது டுவிட்டரில் மத்திய, மாநில அரசுகளை சரமாரியாக விமர்சனம் செய்து வருகிறார்.

அமெரிக்காவில் கொரோனா தாக்கம்!!! பல இந்திய மாணவர்களின் கனவை வீணாக்கியிருக்கிறது!!!

கொரோனா வைரஸ் பரவல் அமெரிக்காவை புரட்டிப் போட்டிருக்கிறது. பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டியிருக்கும் நிலையில் உயிரிழப்பும் 60 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

கொரோனாவால் வியட்நாமில் இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை!!! எதிர்கொண்ட விதம்???

கொரோனா பலி எண்ணிக்கைக் குறித்து உலக நாடுகள் கவலைத் தெரிவித்து வருகின்றன. பரவல் வேகமும் அதிகரித்து வருகிறது.

சென்னையில் நாளை எத்தனை மணி வரை கடைகள் திறந்திருக்கும்? தமிழக அரசு தகவல்

கொரோனா பாதிப்புக் காரணமாக மே 3ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் சென்னை, கோவை, மதுரை மாவட்டங்களில் வரும் ஏப்ரல் 26 முதல் ஏப்ரல் 29 வரையிலும்,

அர்த்தராத்திரியில் குடை பிடித்தால் ஆரோக்யம்: பிரபல நடிகையின் டுவீட்

சமீபத்தில் சேலம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க மக்கள் அனைவரும் குடை பிடிக்க வேண்டும் என சமீபத்தில் கேட்டுக்கொண்டார்.