கொரோனா பரபரப்பிலும் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம்: 3 பேர் கைது

உலகம் முழுவதும் உள்ள பொதுமக்கள் கொரோனா வைரசால் அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கும் நிலையில் தமிழகத்தில் மட்டுமே கொரோனவுக்கு எதிராக மீம்ஸ்களும், கொண்டாட்டங்களும் நடந்து வருவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. சமூக விலகலை கூட பொருட்படுத்தாமல் ஒரு சிலர் செய்து வரும் காரியத்தால் கொரோனா மிக தீவிரமாக பரவும் அபாயம் இருப்பதை இருக்கிறது என்பது குறிப்பிடதக்கது. குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் இந்த கொரோனா பரபரப்பிலும் நடுரோட்டில் கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் வீரபாண்டி என்ற கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்ற இளைஞருக்கு சமீபத்தில் பிறந்த நாள் வந்துள்ளது. இதனை வித்தியாசமாக கொண்டாட நினைத்த அவருடைய நண்பர்கள் ஊரடங்கு உத்தரவையும் பொருட்படுத்தாமல் சமூக விலகலையும் மதிக்காமல் சாலையின் நடுவில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் இந்த வீடியோவை பார்த்த போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன் மற்றும் அவருடைய நண்பர்களை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். கொரோனா பரபரப்பிலும் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்களின் பொறுப்பின்மையை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

More News

காஜல் அகர்வாலிடம் உதவி கேட்ட 'பீட்டா இந்தியா'

இந்தியாவில் விலங்குகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் 'பீட்டா இந்தியா' என்ற அமைப்பு தற்போதைய கொரோனா ஊரடங்கு நேரத்தில் தெருவில் உணவின்றி நடமாடி வரும் நாய் உள்ளிட்

தினமும் 2 மணி நேரம் டாஸ்மாக் திறக்கும் வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஊரடங்கு உத்தரவு காரணமாக டாஸ்மாக் மூடப்பட்டுள்ளதால் மது பிரியர்களுக்காக தினமும் 2 மணி நேரம் டாஸ்மாக் கடைகளை திறந்து வைக்க வேண்டும் என சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த

உங்களை மாதிரி ரசிகர்கள் கிடைக்க விஜய் கொடுத்து வச்சிருக்கணும்: பிரபல இயக்குனர் பாராட்டு

தமிழகத்துக்கு எப்போதும் இயற்கைப் பேரிடர் வந்தாலும் முதல் நபராக சமூக சேவை செய்து பொதுமக்களுக்கு உதவி செய்வது விஜய் ரசிகர் தான் என்பது அனைவரும் அறிந்ததே

கறிவிருந்து வைத்து கொரோனா திருவிழாவை கொண்டாடிய இளைஞர்: அள்ளிச்சென்ற போலீஸ்

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் கொத்துக் கொத்தாக உயிர்கள் பலியாகிக் கொண்டிருக்கும் நிலையில் கும்பகோணத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன் கொரோனாவை திருவிழாவாக கொண்டாடி இருப்பது

வாயில்லா ஜீவன்களுக்கு உணவிடும் வரலட்சுமி: நெகிழ்ச்சியான வீடியோ

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ஏழை எளிய மக்கள் சாப்பாட்டிற்கு திண்டாடி வருகின்றனர்.