ரஜினியின் அரசியல் முடிவு: அதிர்ச்சியில் உயிரிழந்த ரசிகர்!

  • IndiaGlitz, [Thursday,December 31 2020]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் தனது உடல்நிலை காரணமாக அரசியல் கட்சி தொடங்க போவதில்லை என்றும் அரசியலில் குதிக்க போவதில்லை என்றும் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்தார். அவரது இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தாலும் பெரும்பாலானோர் அவரது உடல்நிலையை கணக்கில் கொண்டு ஆறுதல் பெற்றார்கள் என்பதும் ஒரு சிலர் ரஜினியின் இந்த முடிவை ஜீரணிக்க முடியாமல் இன்னும் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ரஜினி அரசியல் கட்சி தொடங்க போவதில்லை என்ற முடிவை அறிவித்தால் ஏமாற்றம் அடைந்த ரஜினி ரசிகர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் விழுப்புரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

விழுப்புரம் அருகே பாணம்பட்டு என்ற கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் ரஜினியின் வெறித்தனமான ரசிகராக இருந்து வந்தார். இவர் ரஜினி அரசியல் கட்சி தொடங்கப் போகிறார் என்ற செய்தி வெளிவந்ததில் இருந்து தனது பகுதியில் ரஜினிக்காக வாக்கு சேகரித்து வந்ததாக தெரிகிறது

இந்த நிலையில் சமீபத்தில் ரஜினி அரசியல் கட்சி தொடங்க போவதில்லை என்று செய்திகள் வெளியானதில் இருந்தே அவர் மன வருத்தத்தில் இருந்ததாகவும், இது குறித்த அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளிவந்ததும் அந்த அதிர்ச்சியிலேயே அவரது உயிர் பிரிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது

இது குறித்து அவர்களுடைய குடும்பத்தினர் கூறியபோது ’ரஜினி மீது மிகப்பெரிய அளவில் பற்றும் பாசமும் ராஜகுமார் கொண்டிருந்தார் என்றும், ரஜினி அரசியல் கட்சி துவங்க போவதில்லை என்று கூறியதில் இருந்தே அவர் மிகுந்த வருத்தத்தில் இருந்ததாகவும், அந்த பாதிப்பில் தான் அவர் அதிர்ச்சியில் இறந்து விட்டதாகவும் கூறியுள்ளனர்

மரணமடைந்த ராஜ்குமாருக்கு மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள், இரண்டு ஆண் குழந்தைகள் என 4 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

More News

2020 இல் உலகை விட்டு பிரிந்த சில தமிழ் சினிமா பிரபலங்கள்…  

2020 இல் கொரோனா பரவல் மக்களை வாட்டி எடுத்ததோடு வேறு சில நிகழ்வுகளும் மக்களை வெகுவாகப் பாதிக்கச் செய்தன

மகளை இப்படியா அசிங்கப்படுத்துவது? ஷிவானி தாய்க்கு சின்மயி கண்டனம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளர்களின் உறவினர்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் முதல் நபராக ஷிவானியின் அம்மா வந்தார் என்பதும், அவர் ஷிவானியை வறுத்தெடுத்தார் என்பது தெரிந்ததே 

திருச்சி டி.என்.பி.எல் தொழிற்சாலை 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவாக்கம்… முதல்வர் அறிவிப்பு!!!

திருச்சியில் உள்ள டி.என்.பி.எல் தொழிற்சாலை 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவுபடுத்தப்பட உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.

மகனின் நடத்தைமீது கடுப்பாகிய தந்தை… நிலத்தை செல்லநாய்க்கு எழுதி வைத்த விசித்திரம்!!!

மத்தியப் பிரதேசத்தில் விவாசாயி ஒருவர் தன்னுடைய செல்ல நாய்க்கு 2 ஏக்கர் நிலத்தை சொந்தமாக எழுதி வைத்து இருக்கிறார்.

இந்தியாவின் இளம் பஞ்சாயத்து தலைவி… மீண்டும் ஒரு அசத்தல் தகவல்!!!

கேரளாவில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தலில் பல அசத்தலான செயல்கள் நடந்தேறி இருக்கின்றன.