மற்றவர்கள் கொடுக்கும் விமர்சனங்களை விட வில்லிசை எனக்கு கொடுக்கும் புகழ் அதிகம் எனக் கூறிய வில்லுப்பாட்டு மாதவி

  • IndiaGlitz, [Monday,April 01 2024]

 

வில்லிசை என அழைக்கப்படும் வில்லுப்பாட்டு என்பது தென்தமிழகத்தில் நாட்டுப்புற கலைகளில் தனிச் சிறப்புடன் திகழும் தமிழர் கலை வடிவங்களில் ஒன்றாகும்.மறைந்து வரும் பல கலைகள் உள்ளன .அதில் வில்லிசையும் ஒன்று .. எத்தனையோ இசைக்கருவிகள் இருந்தாலும் வில்லைக் கொண்டு பாடப்படுவதால் இவை வில்லிசை மற்றும் வில்லுப்பாட்டு என அழைக்கப்படுகிறது .

காப்பு விருத்தம்,வருபொருள் உரைத்தல் ,குருவடி பாடுதல்,அவையடக்கம்,நாட்டு வளம், கதைக்கூறு , வழிபடுதல் என வில்லிசையில் பல அமைப்புகள் உள்ளன.

என் தமிழ் கலைகளை வளர்க்க எம்மால் இயன்றதை செய்வேன் என சொல்வோம் மற்றும் சொல்பவர்களும் உண்டு.ஆனால் அதற்கான முயற்சியை எடுக்க பலருக்கும் மிஞ்சியது அயற்சி மட்டுமே.ஏனென்றால் நாம் கலைகளை நேசிப்போமே தவிர , வளர்க்க முயல்வதில்லை.அதில் சமீபத்தில் வில்லிசைப் பாடி அனைவரது மனதையும் கவர்ந்து இணையத்திலும் பல பாராட்டுக்களைப் பெற்று ,வில்லுபாட்டிற்கு என தனி இடத்தைப் பெற்ற வில்லுப்பாட்டு மாதவி அவர்கள் அவள் க்ளிட்ஸ் யூடியூப் சேனலில் அளித்த பேட்டியில்,

எல்லோருக்கும் வணக்கம்.நான் நல்லா இருக்கேன்.எனக்கு பிடித்தமான கலையுடன் சந்தோஷமாக இருக்கிறேன்.நான் பண்ணிரண்டாம் வகுப்பு படிக்கிறேன்.அதே சமயம் வில்லுப்பாட்டும் பாடிக் கொண்டிருக்கிறேன்.எனக்கு எதிராக வரும் விமர்சனங்களை நான் எப்போதும் எனக்கான மன வருத்தமாக எடுத்து கொள்வதில்லை.தவறாகப் பேசுபவர்கள் பேசிக் கொண்டே இருப்பார்கள்.நான் என்னுடைய வேலையை கலையை சந்தோஷமாக ஆர்வமாக எடுத்து செய்து கொண்டே இருக்கிறேன்.

மேலும் என் மனதை பாதிக்கும் அளவிற்கு எல்லாம் பெரிதாக எந்த கருத்தும் வரவில்லை.உதாசீனம் செய்தவர்களை விட பாராட்டிய மனங்கள் ஜாஸ்தி.இதை எல்லாம் பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கும்.

அதனால் இந்த மாதிரியான பேச்சுக்களை எடுத்து கொள்வதில்லை.பொதுவாகவே ஒரு கலைக்கு கிடைக்கும் பெருமை புகழ் எல்லாம் எனக்கும் கிடைக்கிறது என்று நினைக்கும்போது சந்தோஷமாக இருக்கு.என் வாழ்வில் நான் என்னுடைய கலையை தான் நான் பெருமிதமாக நினைக்கிறேன்.

என்‌ குடும்பம் எனக்கு பிரச்சினையே இல்லை.அவர்கள் எப்போதும் என்னை ஊக்குவித்துக் கொண்டே இருக்கிறார்கள்.நான் எந்த கச்சேரிக்கு போனாலும் என்னை அழைத்து சென்று வருவார்கள்.என்னை நினைத்து என் பெற்றோர்கள் சந்தோஷப்படுகிறார்கள்.

ஒரு காலத்தில் என் அப்பாவைப் பார்த்து, கொத்தனார் மகள் மாதவி என சொல்வார்கள்..இப்போது வில்லுப்பாட்டு மாதவியுடைய அப்பா என சொல்லும்போது என்னை அறியாமலேயே ஆனந்தக் கண்ணீர் வரும்.

சினிமா,பாடல்,நாடகம் இதை எல்லாம் பார்க்கும் போது எனக்கு வில்லிசை தனியாக இனிமையாகத் தெரிந்தது..எனவே அதன் மீது ஆர்வம் கொண்டு கற்றுக்கொண்டேன்.நான் 13 வயதில் இருந்து பாடுகிறேன்.பாட ஆரம்பித்து 5 வருடம் ஆகிறது.நானூறு மேடையில் இதுவரை பாடி இருக்கிறேன்.வெளி மாவட்டத்தில் இருந்து என்னை அணுகி பாட அழைக்கும்போது ,அதிக சந்தோஷப்பட்டேன்.

மேலும் வில்லுப்பாட்டிற்கு வரவேற்புகள் அதிகமாக இருக்கு.இந்த கலையை யோசித்து பார்த்து சந்தோஷப்படும் அளவிற்கு எனக்கு அதிக மகிழ்ச்சியை தந்து இருக்கிறது.நிறைய பேர் என் பாட்டை ரசிப்பதற்காக வருகிறார்கள்.எனவே என் கலையை நான் நம்புகிறேன் அதனோடு சேர்ந்து பயணிக்கிறேன்.என மாதவியின் உணர்வுப்பூர்வமான கலை பயணத்தை தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

More News

அஞ்சுவட்டத்தம்மன் & வராகி அம்மன் - பஞ்சமி வழிபாடு, வீரகத்தி தோஷம், முருகன் அருள் - ஜோதிடர் சீதா சுரேஷ்

முருகனின் முழு அருளை கிடைக்க என்ன செய்ய வேண்டும் ? ஜோதிடர் சீதா சுரேஷ் கூறுகிறார்.

வெற்றிமாறனின் அடுத்த படத்தின் மாஸ் அறிவிப்பு.. டைட்டில் இதுதான்..!

இயக்குனர் வெற்றிமாறன் தற்போது விஜய் சேதுபதி, சூரி நடித்து வரும் 'விடுதலை 2' என்ற படத்தை இயக்கி வரும் நிலையில் அவருடைய அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சற்றுமுன் வெளியாகி

பிக்பாஸ் பாலாஜிக்கு ஒரு மாதத்திற்கு முன்பே திருமணமாகி விட்டதா? அதிர்ச்சி புகைப்படங்கள்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பாலாஜி முருகதாஸ் தனது சமூக வலைதளத்தில் திருமண புகைப்படத்தை பதிவு செய்து தனக்கு ஒரு மாதத்திற்கு முன்பே திருமணம் ஆகிவிட்டது

அல்லு அர்ஜுன் படத்தில் அட்லியின் ஆஸ்தான நடிகை.. த்ரிஷா உண்டா? இல்லையா?

அட்லி இயக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது என்பதும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க போகிறார் என்றும் கூறப்பட்டது.

மரண வெயிட்டிங்.. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் 'ராயன்' அப்டேட்..!

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தனுஷ் நடித்து இயக்கும் 'ராயன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்றுமுன் சன் பிக்சர்ஸ்