close
Choose your channels

வில்லன் நடிகர் மகளுக்கு வெளிநாட்டு மாப்பிள்ளை.. திருமண தேதியும் அறிவிப்பு..!

Monday, October 16, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் பிரபல வில்லன் நடிகரின் மகளுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ள நிலையில் அவருக்கு வெளிநாட்டு மாப்பிள்ளையை பார்த்து நிச்சயம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மணிவண்ணன் இயக்கத்தில் உருவான ’ சந்தன காற்று’ என்ற திரைப்படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானவர் நடிகர் விச்சு விஸ்வநாத். இவர் வில்லனாக மட்டுமின்றி காமெடி மற்றும் குணச்சித்திர கேரக்டர்களில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக சுந்தர சி இயக்கத்தில் உருவான ’அரண்மனை’ ’கலகலப்பு’ உள்ளிட்ட படங்களில் அவரது நடிப்பு ரசிகர்களை மனதை கவர்ந்தது.

100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த நடிகர் விச்சு விஸ்வநாத்தின் மகள் கோகிலா விசுவநாத் என்பவர் ஐடி துறையில் பணிபுரிந்து வரும் நிலையில் ஜெர்மனியில் பணியாற்றும் ஸ்ரீகாந்த் என்பவரை இவர் திருமணம் செய்ய உள்ளார்.

இரு தரப்பு பெற்றவர்களால் சமீபத்தில் இவர்களது திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட நிலையில் நவம்பர் 23ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமணத்திற்கு திரை உலக பிரபலங்கள், அரசியல் விளம்பரங்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment