வில்லன் நடிகர் மகளுக்கு வெளிநாட்டு மாப்பிள்ளை.. திருமண தேதியும் அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Monday,October 16 2023]

தமிழ் திரையுலகின் பிரபல வில்லன் நடிகரின் மகளுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ள நிலையில் அவருக்கு வெளிநாட்டு மாப்பிள்ளையை பார்த்து நிச்சயம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மணிவண்ணன் இயக்கத்தில் உருவான ’ சந்தன காற்று’ என்ற திரைப்படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானவர் நடிகர் விச்சு விஸ்வநாத். இவர் வில்லனாக மட்டுமின்றி காமெடி மற்றும் குணச்சித்திர கேரக்டர்களில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக சுந்தர சி இயக்கத்தில் உருவான ’அரண்மனை’ ’கலகலப்பு’ உள்ளிட்ட படங்களில் அவரது நடிப்பு ரசிகர்களை மனதை கவர்ந்தது.

100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த நடிகர் விச்சு விஸ்வநாத்தின் மகள் கோகிலா விசுவநாத் என்பவர் ஐடி துறையில் பணிபுரிந்து வரும் நிலையில் ஜெர்மனியில் பணியாற்றும் ஸ்ரீகாந்த் என்பவரை இவர் திருமணம் செய்ய உள்ளார்.

இரு தரப்பு பெற்றவர்களால் சமீபத்தில் இவர்களது திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட நிலையில் நவம்பர் 23ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமணத்திற்கு திரை உலக பிரபலங்கள், அரசியல் விளம்பரங்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

பிக்பாஸ் சீசன் 7: இந்த வார நாமினேஷனில் 11 பேர்.. யார் யார் தெரியுமா? முழு விவரங்கள்..!

ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேஷன் படலம் நடைபெறும் என்ற நிலையில் இன்று நாமினேசன் படலம் முடிவடைந்துள்ள நிலையில் சற்றுமுன் பிக் பாஸ், நாமினேஷன் செய்யப்பட்ட போட்டியாளர்களை அறிவித்துள்ளார். 

இப்ப நான் வந்துட்டேன்.. வச்சு செஞ்சுருவேண்டா ஒவ்வொருத்தனையும்.. வெங்கடேஷின் 'சைந்தவ்' டீசர்..!

பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் நடிப்பில் உருவான 'சைந்தவ் என்ற திரைப்படத்தின் தமிழ் டிரைலர் சற்றுமுன் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

'லியோ' தயாரிப்பாளர் திடீரென தொடர்ந்த வழக்கு.. இன்றே அவசர வழக்காக விசாரணை..!

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் வரும் 19ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் திடீரென இந்த படத்தின் தயாரிப்பாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்று தாக்கல் செய்திருப்பது

'லியோ' படம் வெற்றி அடையுமா? தூத்துக்குடியில் ரஜினிகாந்த் பேட்டி..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது 'தலைவர் 170' என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடந்தது.

வேற லெவலில் கெட்டப் மாறிய விஜய் சேதுபதி.. இந்த பிரபல இயக்குனர் படத்திற்காகவா?

தமிழ் தெலுங்கு திரை உலகில் மட்டுமின்றி பாலிவுட்டிலும் கால் பதித்து வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி.  ஷாருக்கானுடன் இவர் நடித்த 'ஜவான்' திரைப்படம் சமீபத்தில்