தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தில் இருந்து திடீரென விலகிய வில்லன் நடிகர்.. என்ன காரணம்?

  • IndiaGlitz, [Wednesday,June 28 2023]

தனுஷ் நடித்து வரும் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் முக்கிய வில்லன் கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த நடிகர் ஒருவர் இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தனுஷ் நடிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’கேப்டன் மில்லர்’. கடந்த 1940 காலங்களில் உள்ள காட்சிகளின் அடிப்படையில் உருவாகி வரும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையாக இருப்பதாகவும் விரைவில் இந்த படத்தின் சில முக்கிய அப்டேட்டுகள் வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த படத்தின் மாஸ் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூன் 30-ம் தேதி வெளியாகும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய வில்லன் கேரக்டரில் நடிக்க நடிகர் டேனியல் பாலாஜி ஒப்பந்தமாகி இருந்த நிலையில் தற்போது அவர் இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாக கூறப்படுகிறது. அவர் கொடுத்த கால்ஷீட்டுகளில் அவரது காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெறவில்லை என்பதை அடுத்து தற்போது அவரால் புதிய கால்ஷீட் கொடுக்க முடியவில்லை என்றும் அதனால் இந்த படத்தில் இருந்து அவர் விலகி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் டேனியல் பாலாஜிக்கு பதிலாக வேறொரு நடிகரை வைத்து படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

More News

கணவரை விவாகரத்து செய்கிறாரா நடிகை அசின்? வைரலான தகவலுக்கு இன்ஸ்டா பதில்!

தமிழ் சினிமா ரசிகர்களிடையே கனவு கன்னியாக வலம்வந்த நடிகை அசின் தன்னுடைய கணவரை விவாகரத்து செய்யப்போகிறார் என்பதுபோன்ற தகவல் ஊடகங்களில் வெளியானதை அடுத்து

வலியை எதிர்த்துப் போராடுவேன்… அறுவை சிகிச்சைக்குப் பிறகு நடிகர் பிருத்விராஜ் உருக்கம்!

மலையாளம், தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருந்துவரும் பிருத்விராஜ் சுகுமாரனுக்கு படப்பிடிப்பின்போது விபத்து ஏற்பட்டு இதனால் அறுவை சிகிச்சை செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகி

இந்த வார ஓடிடி ரசிகர்களுக்கு செம்ம விருந்து.. 4 தமிழ் திரைப்படங்கள் ரிலீஸ்..!

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் குறைந்தது மூன்று அல்லது நான்கு திரைப்படங்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் திரையரங்குகளில் வெளியான ஒரே மாதத்தில் ஓடிடியில் வெளியாகி வருகிறது

'பிச்சைக்காரன் 2' படத்தை அடுத்து விஜய் ஆண்டனியின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

விஜய் ஆண்டனி நடித்த 'பிச்சைக்காரன் 2' திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் நடித்து முடித்துள்ள அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நயன்தாராவின் குரலுக்கு இவ்வளவு பவரா? லைக்ஸ்களை குவிக்கும் ஜிம் வீடியோ..!

லேடி சூப்பர் ஸ்டார்  நயன்தாரா நடித்த பல திரைப்படங்களுக்கு பின்னணி குரல் கொடுத்த டப்பிங் கலைஞர் தீபா வெங்கட் ஜிம்மில் வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் வீடியோ இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.