பறவைகளுக்காக… 48 வருடங்களாக பட்டாசு வெடிக்காத கிராமம்… மாவட்ட ஆட்சியர் பாராட்டு!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிவகங்கை மாவட்டத்தில் 17 ஹெக்டேர் பரப்பளவில் ஒரு பறவைகள் சரணாலயம் இருக்கிறது. இந்த சரணாலயத்திற்கு சீசனுக்காக வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பறவைகள் வருகின்றன. இதனால் பறவைகளின் பாதுகாப்புக்காக அருகில் உள்ள பல்வேறு கிராம மக்கள் தொடர்ந்து 48 வருடங்களாக தீபவாளிக்கு பட்டாசு வெடிப்பதில்லை. மேலும் கல்யாணம், துக்க நிகழ்ச்சி என்று எந்தவொரு நிகழ்வுக்கும் இவர்கள் பட்டாசு வெடிப்பதில்லை. இவர்களின் தியாகத்தைப் பாராட்டி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் கிராம மக்களுக்கு விதவிதமான இனிப்புகளை வழங்கி பாராட்டினார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வேட்டங்குடிபட்டி அடுத்த கொள்ளுக்குடிப்பட்டி கண்மாயில் 17 எக்டேர் பரப்பளவில் பறவைகள் சரணாலயம் உள்ளது. இந்த இடத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் சீதோஷ்ண நிலைக்காகவும் இனப்பெருக்கத்திற்காகவும் பிரான்ஸ், மலேசியா, ஜப்பான், கொரியா, பிலிப்பைன்ஸ், நார்வே, ஆஸ்திரேலியா, போன்ற நாடுகளில் இருந்து உண்ணிக்கொக்கு, முக்குளிப்பான், நீலச்சிறவி, சாம்பல் நிற நாரை, பாம்புதாரா, கருநீல அரிவாள் மூக்கன், கரண்டிவாயன், நத்தை கொத்தி நாரை போன்ற 217 வகையான 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் வருகின்றன.
இந்தப் பறவைகள் தங்களது இனப்பெருக்கத்தை முடித்துக் கொண்டு ஏப்ரல்- மே மாதங்களில் மீண்டும் தங்களது நாட்டிற்கு இடம்பெயர்ந்து சென்று விடுகின்றன. இந்நிலையில் கண்மாய்க்குள் முட்டை இட்டு அடைகாத்து நிற்கும் பறவைகளுக்காக அந்த கிராம மக்கள் கடந்த 1972 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 48 ஆண்டுகளாக பட்டாசு வெடிக்காமல் அமைதி காத்து வருகின்றனர். மேலும் இவர் சுப மற்றும் துக்க நிகழ்ச்சிகளுக்காகக் கூட பட்டாசு வெடிப்பதில்லை. மேலும் கண்மாய்க்குள் வேட்டைக் காரர்களை அனுமதிக்காமலும் குரங்குகளை கண்காணித்து கிராம மக்கள் பறவைகளுக்கு தொடர்ந்து பாதுகாப்பு அளித்து வருகின்றனர். இவர்களின் தியாகத்தை மாவட்ட ஆட்சியர் மனதார பாராட்டி உள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments