பறவைகளுக்காக… 48 வருடங்களாக பட்டாசு வெடிக்காத கிராமம்… மாவட்ட ஆட்சியர் பாராட்டு!!!

  • IndiaGlitz, [Friday,November 13 2020]

 

சிவகங்கை மாவட்டத்தில் 17 ஹெக்டேர் பரப்பளவில் ஒரு பறவைகள் சரணாலயம் இருக்கிறது. இந்த சரணாலயத்திற்கு சீசனுக்காக வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பறவைகள் வருகின்றன. இதனால் பறவைகளின் பாதுகாப்புக்காக அருகில் உள்ள பல்வேறு கிராம மக்கள் தொடர்ந்து 48 வருடங்களாக தீபவாளிக்கு பட்டாசு வெடிப்பதில்லை. மேலும் கல்யாணம், துக்க நிகழ்ச்சி என்று எந்தவொரு நிகழ்வுக்கும் இவர்கள் பட்டாசு வெடிப்பதில்லை. இவர்களின் தியாகத்தைப் பாராட்டி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் கிராம மக்களுக்கு விதவிதமான இனிப்புகளை வழங்கி பாராட்டினார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வேட்டங்குடிபட்டி அடுத்த கொள்ளுக்குடிப்பட்டி கண்மாயில் 17 எக்டேர் பரப்பளவில் பறவைகள் சரணாலயம் உள்ளது. இந்த இடத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் சீதோஷ்ண நிலைக்காகவும் இனப்பெருக்கத்திற்காகவும் பிரான்ஸ், மலேசியா, ஜப்பான், கொரியா, பிலிப்பைன்ஸ், நார்வே, ஆஸ்திரேலியா, போன்ற நாடுகளில் இருந்து உண்ணிக்கொக்கு, முக்குளிப்பான், நீலச்சிறவி, சாம்பல் நிற நாரை, பாம்புதாரா, கருநீல அரிவாள் மூக்கன், கரண்டிவாயன், நத்தை கொத்தி நாரை போன்ற 217 வகையான 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் வருகின்றன.

இந்தப் பறவைகள் தங்களது இனப்பெருக்கத்தை முடித்துக் கொண்டு ஏப்ரல்- மே மாதங்களில் மீண்டும் தங்களது நாட்டிற்கு இடம்பெயர்ந்து சென்று விடுகின்றன. இந்நிலையில் கண்மாய்க்குள் முட்டை இட்டு அடைகாத்து நிற்கும் பறவைகளுக்காக அந்த கிராம மக்கள் கடந்த 1972 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 48 ஆண்டுகளாக பட்டாசு வெடிக்காமல் அமைதி காத்து வருகின்றனர். மேலும் இவர் சுப மற்றும் துக்க நிகழ்ச்சிகளுக்காகக் கூட பட்டாசு வெடிப்பதில்லை. மேலும் கண்மாய்க்குள் வேட்டைக் காரர்களை அனுமதிக்காமலும் குரங்குகளை கண்காணித்து கிராம மக்கள் பறவைகளுக்கு தொடர்ந்து பாதுகாப்பு அளித்து வருகின்றனர். இவர்களின் தியாகத்தை மாவட்ட ஆட்சியர் மனதார பாராட்டி உள்ளார்.

More News

அமெரிக்காவிலும் கோலோச்சும் இந்தியர்கள்!!! வெள்ளை மாளிகையின் புதிய நிர்வாகத்தில் இத்தனை  நபரா???

நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சார்ந்த ஜோ பிடன் அறுதிப் பெரும்பான்மை வெற்றிப் பெற்றுள்ளார்.

ஐபிஎல் 2021 இல் 9 ஆவது அணி? உரிமையாளர் யார்? பரபரப்பை ஏற்படுத்தும் புது அறிவிப்பு!!!

கொரோனா பரவல் காரணமாக ஐபிஎல் தொடரின் 13 ஆவது சீசன் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

கணினி புரோகிராமில்… கின்னஸ் சாதனை படைத்த 2 ஆம் வகுப்பு இந்திய மாணவன்!!!

கம்பியூட்டர் புரோகிராமைப் பார்த்து பெரியவர்களே மண்டையைப் பிய்த்துக் கொள்ளும்போது நம்ம ஊரு 6 வயது சிறுவன் அதில் கின்னஸ் சாதனை புரிந்து இருக்கிறான்.

தேர்தல் களத்துக்கு தயாராகி வரும் அஇஅதிமுக… விறுவிறுப்பான பணிகளால் உற்சாகம்!!!

தமிழகத்தில் அடுத்த மே மாதம் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன.

என்னுடைய சூப்பர் ஹீரோ உங்கள் தந்தை தான்: நடிகைக்கு நன்றி கூறிய சூர்யா!

சூர்யா நடித்த 'சூரரைப் போற்று' திரைப்படம் நேற்று ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் உள்பட நான்கு தென்னிந்திய மொழிகளில் வெளியாகியுள்ள