மபி...யில் ஒரு அதிசியம்.....! கொரோனாவே இல்லாத கிராமம்...!
Send us your feedback to audioarticles@vaarta.com
மத்தியப்பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில், இதுவரை ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்ற செய்தி பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனாவால் இந்தியா முழுவதும் தவித்து வரும் சூழலில்வட மாநிலமான, மத்தியப்பிரதேசத்தில் உள்ள சிக்லஹார் என்ற கிராமத்தில் இருக்கும் ஒருவருக்கு கூட கொரோனா இல்லை என்ற செய்தி கேட்போரை ஆச்சரியத்தில் உறையவைத்துள்ளது. இதற்கு காரணம் கொரோனா துவங்கிய காலத்திருந்தே, இங்கு யாரும் உள்நுழையாதபடி கிராமத்தின் எல்லைப் பகுதிகளை கிராம மக்கள் தடுப்புகள் வைத்து அடைத்துள்ளனர். இந்த கிராமத்தில் உள்ள பெண்கள் தான் முக்கியமாக, அங்குள்ள மக்களை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்து வருகின்றனர். விடிய, விடிய எல்லைப்பகுதிகளில் காவலிலும், பாதுகாப்பு பணியிலும் இருந்து வருகிறார்கள் அவர்கள்.
கிராமத்தில் உள்ளவர்களுக்கு தேவைப்படும் அத்தியாவசியப்பொருட்களை வெளியில் சென்று வாங்கி வருவதற்கு இரண்டு இளைஞர்களை கிராம மக்கள் நியமித்துள்ளனர். அந்த இருவர் மட்டும் வெளியில் சென்று பொருட்கள் வாங்கி வருவதால், கிராமத்தில் யாருக்கும் கொரோனா தொற்று பாதிப்பில்லை என அவர்கள் கூறுகிறார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments