பஞ்சாயத்து தலைவர் கேரக்டர் படத்தில் எத்தனை நிமிடங்கள்? அட்லி
- IndiaGlitz, [Wednesday,October 11 2017]
தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வரவுள்ள நிலையில் இந்த படத்தின் புதுப்புது செய்திகள் படத்தின் எதிர்பார்ப்பை உயர்த்தி கொண்டே வருகிறது.
இந்த நிலையில் விஜய் இதுவரை நடித்திராத பஞ்சாயத்து தலைவர் மற்றும் மேஜிக்மேன் ஆகிய இரண்டு கேரக்டர்களில் இந்த படத்தில் நடித்துள்ளார். குறிப்பாக பஞ்சாயத்து தலைவர் கேரக்டரின் ஸ்டில்ஸ்கள் மற்றும் புரமோ வீடியோவை பார்க்கும்போது இந்த கேரக்டர் விஜய்யின் வித்தியாசமான முயற்சியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
இந்த நிலையில் விஜய் நடித்துள்ள பஞ்சாயத்து தலைவர் கேரக்டர் படத்தில் 50 நிமிடங்கள் வருவதாகவும், இந்த படத்தின் ஹைலைட்டாக இந்த கேரக்டர் இருக்கும் என்றும் அட்லி கூறியுள்ளார். எனவே இந்த ஐம்பது நிமிடங்களும் ரசிகர்களுக்கு விருந்து படைக்க தவறாது என்றே கருதப்படுகிறது. அதேபோல் மேஜிக்மேன் கேரக்டரிலும் புதுமை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எதிர்பார்ப்புகளை 'மெர்சல்' படத்தில் பூர்த்தி செய்யும் வ்கையில் இந்த கேரக்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளதா? என்பது அடுத்த வாரம் இந்நேரம் தெரிந்துவிடும்