வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துவமனையில் அனுமதி.. என்ன ஆச்சு?

  • IndiaGlitz, [Thursday,March 28 2024]

வில்லேஜ் குக்கிங் சேனலில் வரும் பெரியவர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு என்ன ஆச்சு என்பது குறித்து அவரது பேரன் தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார்.

யூடியூபில் பிரபலமான வில்லேஜ் குக்கிங் சேனல் கிராமத்து ஸ்டைலில் பலவிதமான உணவுகளை தயாரிக்கும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறது என்பதும் இந்த சேனலுக்கு உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி முன்னிலையில் இந்த குழுவினர் சமைத்த வீடியோ பிரபலமானது. அதேபோல் கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ படத்தில் இந்த சேனலின் உறுப்பினர்கள் நடித்திருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வில்லேஜ் குக்கிங் சேனலில் வரும் பெரியவர் பெரியதம்பி என்பவர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு என்ன ஆச்சு என்பது குறித்து அவரது பேரன் சுப்பிரமணியன் வேலுச்சாமி என்பவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். அவர் இது குறித்து கூறியதாவது: தாத்தா இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி!

இதனை அடுத்து வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என்று பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.